மும்பை பங்களாவில் ஊஞ்சல் அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பலி
மும்பை: மும்பையில் எதிர்பாரா விதமாக ஊஞ்சல் அறுந்து அதன் மேலே பொருத்தப்பட்டிருந்த பளிங்கு சட்டம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.
மும்பை காந்திவிலியில் ராஜ் ரெசிடென்சி காம்ளக்ஸ்சில் உள்ள பங்களா ஒன்றில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தகிசர் பகுதியை சேர்ந்த நிசிகேத் ஆதித்யா(9), கரண்(6) ஆகிய 2 சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
உள்ளே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்திருந்த சிறுவர்கள் அனைவரும் அருகில் விளையாடிக் கொண்டிருக்க நிசிகேத், கரண் மற்றும் மற்றொரு சிறுவனும் அந்த பங்களா வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென அந்த ஊஞ்சல் அறுந்து கீழே விழுந்தது. இதில், மேலே பொருத்தப்பட்டிருந்த பளிங்கினால் ஆன சட்டமும் இடிந்து சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டுப் பெரியவர்கள் ஓடி வந்து கட்டிட இடிபாடுகளில் இருந்து அவர்களை மீட்டுள்ளனர்.
உடனடியாக தலையில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களையும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்ரி நிசிகேத் மற்றும் கரண் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காந்திவிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications