இரட்டை இலை : தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெறுகிறது ஓபிஎஸ் அணி
இரட்டை இலை சின்னம் முடக்கம் தொடர்பான புகாரை ஓபிஎஸ் அணியினர் திரும்பப்பெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னம் சர்ச்சை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரை ஓபிஎஸ் அணியினர் திரும்பப்பெறுவதாக கூறியுள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து புகாரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். புகார் திரும்ப பெறும் பட்சத்தில் மீண்டும் இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு கிடைக்கும்.
கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

முடக்கப்பட்ட சின்னம்
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பதில் கேள்வி எழுந்தது. இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகின. இது குறித்தும் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி வைத்தது.

ஆவணங்கள் தாக்கல்
இது தொடர்பாக லட்சக்கணக்கில் ஆவணங்கள்,பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று இருவருமே கூறி வந்தனர்.

இணைந்த அணிகள்
இந்த நிலையில் சசிகலா சிறை சென்றதால் தற்போது டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி அணிகள் இணைந்து விட்டன.

புகார் மனு வாபஸ்
இதனையடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கம் தொடர்பான புகார் மனுவை ஓபிஎஸ் அணியினர் திரும்பப்பெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து வழக்கை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளனர்.

எங்களுக்கே இரட்டை இலை
அதே நேரத்தில் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இரட்டை இலையை மீட்டாலும் அது எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வழக்கு என்னவாகும்?
இரட்டை இலை சின்னத்தையும், தேர்தல் செலவுகளை மட்டும் தான் தேர்தல் ஆணையம் முடக்க முடியும் எங்களை யாராலும் முடக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது உள்ள வழக்கு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றிச்சின்னம்
இரட்டை இலை அதிமுகவின் வெற்றிச்சின்னம். இந்த சின்னம்தான் உண்மையான அதிமுக தொண்டர்களின் உயிர்மூச்சாக உள்ளது. வேட்பாளர் யார் என்று பார்க்காமல் இரட்டை இலைக்கு ஓட்டு போடும் அதிமுகவினர்தான் இன்றைக்கும் அதிகம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் மீண்டு வரவேண்டும் என்பதே அதிமுகவினரின் வேண்டுதலாக உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications