ராஜஸ்தானில் பயங்கரம்.. 3 தினங்கள் அடைத்து வைத்து இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரு நகரங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் 13 வயது, 15 வயது சிறுமிகள். இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவரிடமும் இரு சிறுவர்கள் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு வந்துவிடுமாறு அழைத்துள்ளார்கள்.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

இதை நம்பிய இரு சகோதரிகளும் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அங்கிருந்து அவர்கள் கோட்டா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இரு சிறுவர்கள் மற்றும் மேலும் 3 பேர் இணைந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

இரு சிறுமிகள்

இரு சிறுமிகள்

இதையடுத்து மகள்களை காணவில்லை என போலீஸில் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டையில் கோட்டாவில் இரு சிறுமிகளையும் செப்டம்பர் 21-ஆம் தேதி கண்டுபிடித்தனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

விசாரணையில் இரு சிறுமிகளும் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறிய வாக்குமூலம் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இருவரும் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீஸார் கூறுகிறார்கள்.

குற்றவாளிகள் மிரட்டல்

குற்றவாளிகள் மிரட்டல்

பலாத்காரத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கூடாது என இரு சிறுமிகளையும் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். மேலும் தங்களை காட்டிக் கொடுத்தால் போலீஸார் கண்முன்னே சுட்டுக் கொன்று விடுவோம் என குற்றவாளிகள் மிரட்டியதாக போலீஸில் தந்தை புகார் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+