மைனர் பெண்ணை மிரட்டி பலமுறை பலாத்காரம்.. 2 கடற்படை வீரர்கள் உள்பட 3 பேர் கைது
மும்பை: மும்பையில் ஒரு மைனர் பெண்ணை பலமுறை மிரட்டியே பலாத்காரம் செய்து சீரழித்து வந்த 3 பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் கடற்படையினர் ஆவர்.
இதுதொடர்பாக மொத்தம் நான்கு பேர் மீது கப் பரேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது நபரான ப்ருத்வி என்கிற உமேஷ் சிங் செளகான் கடற்படை வீரர் ஆவார். இவர் தற்போது மும்பைக்கு வெளியே பணிநிமித்தமாக உள்ளார். அவரை விசாரணைக்கு வருமாறு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் அவரும் கைது செய்யப்படவுள்ளார்.

தற்போது ஜிதேந்திர சிங் டரகோகுல் வால்சந்த் (24), பவன் என்கிற ஓம்பால் ஹோஷியார் சிங் (31), ராகேஷ் பிரசாத் சிங் (41) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மைனர் பெண் இந்த நான்கு பேரில் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். கடந்த மாதம் இருவரும் பிரிந்து விட்டனர். அந்த பெண் பின்னர் இன்னொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இதனால் கோபமடைந்த அந்த கடற்படை வீரர், அப்பெண்ணை மிரட்ட ஆரம்பி்த்தார். உனது புதுக் காதலனிடம் உண்மையைச் சொல்லி விடுவேன் என்று மிரட்டி செக்ஸ் உறவுக்கு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அப்பெண் அவரது மிரட்டலுக்குப் பணிந்தார். அதன் பின்னர் தனது சக வீரர்களுடனும் அப்பெண்ணை நாசம் செய்யத் தொடங்கினார்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்த நான்கு பேரும் பலமுறை அவரை பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் கூறுகினறனர்.
இந்த வழக்கில் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications