மாசம் ரூ. 67 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த 2 என்ஐடி மாணவர்கள்
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து வரும் 2 மாணவர்கள் அமெரிக்க நிறுவனத்தில் வருடம் 12 லட்சம் டாலருக்கு மேல் ஊதியம் பெறும் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் ஷிஜித் குப்தா மற்றும் அலி ஜஹீர் இருவரும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள எபிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மாதம் 1 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 67 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.டி யின் ஊடக தொடர்பாளரும் பேராசிரியருமான ராஜீவ் பூஷண் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மாணவர் அதிக சம்பளத்தில் பணியில் சேர்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications