மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பகவான்பூர் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாமில் 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜர்கிராம், மேற்கு திட்னாபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் காலையிலேயே வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பகவான்பூர் தொகுதியில் சத்சமல் நகரில் வாக்குப்பதிவு காலை தொடங்க இருந்தது. அங்கு வந்த 2 பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வாக்காளர்களை அச்சறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர்கள் திடீரென சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திரிணாமுல் கட்சியினருடன் சேர்ந்து மர்ம நபர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தியாக பாஜக பகீர் புகார் தெரிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications