ஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை!
சகோதரிகளை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
ராய்ப்பூர்: ஆண் நண்பருடன் பழக்கமானது, டிக்டாக் வீடியோ வரை தொடரவும்.. ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தனியார் லாட்ஜ் உள்ளது.. இங்குள்ள ரூம் ஒன்றில் 2 பெண்கள் திடீரென அலறினர்.. அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்ததில் 2 பெண்கள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

பட்டப்பகலில் ஹாஸ்டலுக்குள் நுழைந்து இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் இந்த விசாரணையில் இறங்கினர்... அப்போதுதான் 2 பேர் ஹாஸ்டல் ரூமுக்குள் வருவதும், தப்பி ஓடுவதும் சிசிடிவி கேமிராவில் தெரிந்தது. பின்னர்தான், கொலையான 2 பேரும் சகோதரிகள் என்பதும் அவர்களை தாக்கியது சயீப், குலாம் முஸ்தபா என்பதும் தெரியவந்தது.
இந்த சகோதரிகள் பெயர் மனிஷா, மஞ்சு.. ராய்காட்டை சேர்ந்தவர்கள்.. மனிஷா ராய்ப்பூரில் தங்கி நர்சிங் படிக்க.. உதவியாக இருந்துள்ளர் மஞ்சு.. இதில், மஞ்சுவை சயீப் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் என்றாலும், கருத்துவேறுபாட்டில் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த சமயத்தில்தான் டிக்டாக் வீடியோவில் கவனத்தை திருப்பினார்.. நிறைய ஆண் நண்பர்களும் நட்பானார்கள்.. இது சயீப்புக்கு ஆத்திரத்தை தந்தது. இந்த சமயத்தில், ஆண் நண்பர் ஒருவருடன் டிக்டாக் வீடியோ ஒன்றினை சோஷியல் மீடியாவில் போட, அதை பார்த்து சயீப் இன்னும் ஆவேசமானார்.
முஸ்தாபா என்ற நண்பனிடம் சென்று, மனைவியை கொலை செய்ய வருமாறும், 7 லட்சம் பணம் தருவதாகவும் சொன்னார்... இதற்கு ஒப்புக் கொண்ட நண்பனும், மஞ்சு தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு சென்றனர்.. ஒரு மணி நேரமாக சகோதரிகளுடன் சண்டை நடந்துள்ளது.. அப்போதுதான், சயீப்பும், முஸ்தாபாவும் கிச்சனில் இருந்த தோசை கல்லை எடுத்து வந்து மஞ்சுவை அடித்தே கொன்றனர்.. இதை தடுக்க வந்த மனிஷாவையும் கொலை செய்துவிட்டு தப்பினர்.. இப்போது சயீப், முஸ்தாபா இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications