எல்லையில் பாக்.,ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்...2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் பலியாகி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ நிலைகள் மீது குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். குரேஸ் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகள், மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை இந்த தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வருகிற 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications