ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடிக்கடி மறைந்து இருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வரும் இந்த தீவிரவாதிகளை பிடிக்க குல்வாம், புல்வமா, அனந்நாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியினை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை குல்வாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். நக்நாத்- சிம்மர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது நடந்த சண்டையில் இரண்டு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications