பெங்களூர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களுக்கு தடை.. காவல்துறை அதிரடி
பாதுகாப்பு காரணங்களை கருதி, மீண்டும், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களில் பயணிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர்: தகவல் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூரிலுள்ள முக்கியமான மேம்பாலமான எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களுக்கு காவல்துறை தடை விதித்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
பெங்களூர் பொம்மனஹள்ளி முதல் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வரையிலான சுமார் 10 கி.மீ தூரத்திற்கு நீண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு டோல் வசூலிக்கப்படுகிறது.
இந்த மேம்பாலம் அளவில் குறுகியது. ஆனால், 10 கி.மீ தூரத்திற்கு எந்த வேகத்தடையும், சிக்னலும் கிடையாது என்பதால் கார்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன.

சட்ட விரோத கார் ரேஸ்கள்
நள்ளிரவில் இங்கு சட்ட விரோத கார் ரேஸ்கள் நடக்கின்றன. சமீபத்தில் ரேசில் ஈடுப்டட ஒரு பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக காரை மகனுக்கு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டிருந்தார்.

பைக் கீழே வீசப்பட்டது
எனவே, இந்த மேம்பாலம் டூவீலர்களுக்கு அபாயகரமாக மாறிவிட்டது. அதிவேகமாக வரும் கார்கள், பைக்குகளை முட்டி மோதி தூக்கி எறிந்துவிடுகின்றன. பைக்கில் செல்வோர் மேம்பாலத்தின்கீழே தூக்கி வீசி கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

காரணம் இதுதான்
பெரும்பாலான விபத்துகள், பின்னால் இருந்து வந்த கார்கள் மோதியதால்தான் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம், வளைவான பகுதிகள் மேம்பாலத்தில் இருப்பதும், பைக்குகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேகமாக போக முடியாததும்தான். காற்று அதிவேகத்தில் அடிப்பதால் பாலத்தில் பயணிக்கும் டூவீலர் ஓட்டிகளால் 60 கி.மீக்கு மேல் வேகத்தில் செல்ல முடிவதில்லை. ஆனால், கார்களோ மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்கின்றன.

வாபஸ் பெற்ற காவல்துறை
இதையடுத்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்கள் செல்ல கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, போக்குவரத்து காவல்துறை திடீரென தடை விதித்தது. இதனால் டூவீலர் ஓட்டிகள் பாலத்திற்கு கீழே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு டிராபிக் நெரிசல் அதிகரித்தது. இதையடுத்து புதன்கிழமை மாலையில், தனது உத்தரவை காவல்துறை திரும்ப பெற்றுள்ளது.

மீண்டும் அமல்?
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களை கருதி, மீண்டும், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் டூவீலர்களில் பயணிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications