வாரத்துல 3 நாளாச்சு.. அப்பறம் 3 மாசமாச்சு.. இரு பெண்களுடன் குடும்பம்.. கோவை சரளாக்களாக மாறிய தருணம்
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் இரண்டு பெண்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்த இளைஞரை உண்மை தெரிந்தவுடன் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம். அவர் சொந்தமாக ஆழ்துளை கிணறுக்கு துளையிடும் வண்டி வைத்துள்ளார். இதனால் இவர் வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்கள் வீட்டுக்கு வர முடியாது என மனைவியிடம் கூறியுள்ளார்.
இது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பரசுராம் மூன்று மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நாட்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் மனைவி கேட்டார்.

அதிர்ச்சி
அதற்கு பரசுராம் மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் மனைவிக்கு மீண்டும் மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வேலைக்குச் சென்ற போது கணவனை மனைவி பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

இரு மனைவிகள்
தெலுங்கானா மாநிலத்திலுள்ள கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் பரசுராம் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. வேறு ஒரு பெண்ணுடன் பரசுராமை பார்த்த மனைவிக்கு ஆத்திரம் ஏற்பட்டு அடிக்க பாய்ந்தார். ஆனால் இரண்டாவது மனைவியோ அழத் தொடங்கினார்.

இரு மனைவிகள்
அப்போதுதான் பரசுராமுக்கு திருமணம் ஆன விவகாரம் இரண்டாவது மனைவிக்கு தெரியாது என்பது முதல் மனைவிக்கு தெரியவந்தது. பரசுராமுக்கு ஏற்கெனவே திருமணமானது தனக்கு தெரியாது என கூறி அவர் அழுதுள்ளார். இதையடுத்து இரு மனைவிகளும் கைகோர்த்துக் கொண்டனர்.

பரசுராம்
அப்புறம் என்ன? கோவை சரளாவாக மாறி வெளுத்தெடுத்தனர். பரசுராமை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் பரசுராமை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் வரும் வரை இருவரும் சேர்ந்து பரசுராமை அடித்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications