"இவ்வளவு வேகம் வேண்டாம்.." கதறிய நண்பர்.. அடுத்த நொடி 140 கிமீ வேகத்தில் கவிழ்ந்த கார்.. 4 பேர் பலி
ஜெய்ப்பூர்: அதிகாலை நேரம் காரை 140 கிமீ வேகத்தில் காரை இயக்கிய இளைஞர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன் பயணித்த இளைஞர் ஒருவர், இவ்வளவு வேகம் வேண்டாம் எனப் படித்துப் படித்துச் சொல்லியும் கேட்காமல் காரை வேகமாக இயக்கியதே இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் பொறுப்பில்லாத வகையில் அதிவேகமாகக் காரை இயக்குகிறார்கள். வேகமாகக் காரை இயக்கும்போது விபத்து ஏற்படவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். இதன் காரணமாகவே மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

அதிவேகம்
இருப்பினும், அதைக் கேட்காமல் சில இளைஞர்கள் அதிவேகமாகத் தங்கள் வாகனங்களை இயக்குகிறார்கள். அதுபோன்ற நேரங்களில் மோசமான விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்துள்ளது. அங்கு அதிகாலை நேரத்தில் அதிவேகமாக வந்த கார் மிக மோசமான விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
என்ன நடந்தது
கடந்த 17ம் தேதி இந்த கோரமான விபத்து நடந்த நிலையில், இது தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இளைஞர்கள் சிலர் அதிவேகமாகக் காரை இயக்கியுள்ளனர். சவினா பகுதியில் கார் 140 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது.. அப்போது தான் எதிர்பாராத விதமாக கார் தலைகுப்புற கவிழ்ந்து, விபத்து நடந்துள்ளது.
கார் விபத்தில் சிக்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஓட்டுநர் ஷெர் முகமது, அகமதாபாத் பைபாஸில் காரை 100-120 கி.மீ. வேகத்தில் முதலில் இயக்குகிறார். பிறகு சில நிமிடங்களில் காரை 140 கி.மீ. வேகத்தில் ஓட்டுகிறார். கையில் சிகரெட், சத்தமான மியூசிக் எனக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் காரை ஓட்டியுள்ளனர்.
எவ்வளவு சொல்லியும் கேட்கல
வீடியோ தொடங்கி 1.10 நிமிடங்கள் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால், அடுத்து சட்டென கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அந்த வீடியோவில் காரின் பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர், இவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டாம் என ஓட்டுநரிடம் பலமுறை சொல்வதும் கூட தெளிவாகக் கேட்கிறது. இருப்பினும், அதையும் கேட்காமல் காரை வேகமாக ஓட்டியுள்ளனர். இந்த அதிவேகமே நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டம் மரண ஓலமாக மாற பிரதானக் காரணமாக இருந்துள்ளது.
உயிரிழப்புகள்
அதிகாலை 3 மணியளவில் இந்தத் துயர விபத்து நிகழ்ந்தது. காரில் சிக்கியிருந்தவர்கள் சுமார் பத்து நிமிடங்கள் வரை உதவி கோரி அலறியுள்ளனர். இருப்பினும், விபத்து நடந்தபோது அங்கு அருகே யாருமில்லை. மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், நான்கு பேர் உயிரிழந்திருந்தனர், இருவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் அனுப்பி வைத்தனர்.
அவர்களும் கூட இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிவேகம் எந்தளவுக்கு ஆபத்தாக முடியும் என்பதைக் காட்டுவதாகவே இந்த வீடியோ இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications