உதய்பூர் இரட்டை கொலை.. பெவிகுவிக்கால் கள்ளக்காதலனின் ஆண் உறுப்பு துண்டிப்பு.. பெண் உறுப்பில் காயம்
உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மந்திரவாதியால் கொல்லப்பட்ட கள்ளக்காதல் ஜோடியின் பிறப்புறுப்புகளில் வெட்டு காயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் மஜாவாட் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் சடலங்க் நிர்வாண நிலையில் காணப்பட்டன. அதில் ஆணின் உறுப்பு வெட்டப்பட்டும், பெண்ணின் பிறப்புறுப்பில் காயமும் இருந்தது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்தது சோனு சிங் (28) மற்றும் மீனா (30) என்பது தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் கள்ளக்காதல் ஜோடிகளாவர்.

விசாரணை
இந்த விசாரணையில் மந்திரவாதியான பாலேஷ் குமார் என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே பாதவி குடா பகுதியில் ஒரு கோயில் உள்ளது. இந்த கோயிலின் மந்திரவாதியாக உள்ளவர் பாலேஷ் குமார்.

சோனு
இங்கு ராகுலும் சோனும் அவ்வப்போது வந்த சென்றதால் பழக்கம் ஏற்பட்டது . இருவருக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டதாக தெரிகிறது. இதனால் ராகுல் தனது மனைவியுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்ப சண்டை ஓய்வதற்கு ராகுலின் மனைவி மந்திரவாதி பாலேஷ் குமாரை தேடி சென்றார்.

கள்ளக்காதல் ஜோடி
இதனிடையே பாலேஷ் குமாருக்கு ராகுலுக்கும் சோனுவுக்கும் இருக்கும் கள்ளக்காதல் தெரியவந்தது. இதை ராகுலின் மனைவியிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராகுலின் மனைவி கணவரிடம் தகராறு செய்தார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப சண்டை பூதாகரமானது. அப்போதுதான் இந்த சண்டைக்கு மந்திரவாதிதான் காரணம் என்பது ராகுலுக்கு தெரியவந்தது.

மந்திரவாதியிடம் சண்டை
இந்த விஷயத்தை சோனுவிடம் ராகுல் கூறியுள்ளார். இதையடுத்து ராகுலும் சோனுவும் மந்திரவாதியிடம் சென்று, எங்கள் விவகாரத்தை ஏன் போட்டு கொடுத்தாய், நாங்கள் எப்படி போனால் உனக்கு என்ன? உன்னை பழிக்கு பழி வாங்குவோம் என கூறிவிட்டு சென்றனர். இது பாலேஷ் குமாருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு மந்திரவாதி என்று கூட பார்க்காமல் எந்த அச்சமும் இன்றி நம்மை மிரட்டி விட்டார்களே என்ற ஆதங்கத்துடன் பாலேஷ் குமார் இருந்துள்ளார்.

மந்திரவாதியை மிரட்டிய தம்பதி
மேலும் மந்திரவாதியை நம்பி வரும் பக்தர்களிடமும் சுயரூபத்தை சொல்வோம் என தம்பதி சொன்னதால் அவருக்கு அச்சமும் ஏற்பட்டது. ஏதோ பக்தர்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்தால் அதில் இந்த ராகுலும் சோனுவும் மண்ணை அள்ளி போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களை தீர்த்து கட்ட மந்திரவாதி முடிவு செய்தார். இதற்காக அவர்கள் இருவரையும் அழைத்து நல்லவர் போல் பேசியுள்ளார்.

புனித நீர்
நீங்கள் இருவரும் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு வனப்பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருங்கள். நான் அங்கு வருகிறேன். உங்கள மீது புனித நீரை ஊற்றுகிறேன். அதன் பிறகு நீங்களே நினைத்தால் கூட உங்களை பிரிக்க முடியாது என கூறிவிட்டார். இதனால் கள்ளக்காதல் ஜோடிக்கு குஷி ஏற்பட்டது. பாலேஷ் குமார் சொன்னது போல் நவம்பர் 18 ஆம் தேதி ராகுலும் சோனுவும் கெலாப்டி காட்டுக்கு சென்றனர்.

உல்லாசம்
அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது அங்கு வந்த சாமியார் , அப்படியே உல்லாச நிலையில் இருங்கள் , நான் மந்திர தண்ணீர் ஊற்றுகிறேன் என்றார். இதை நம்பிய இருவரும், அப்படியே இருந்தார்கள், உடனே அவர்கள் மீது பெவிகுவிக்கை ஊற்றினார். சிறிது நேரம் கழித்து அவர்களால் நகரவே முடியவில்லை. இருவர் உடலிலும் ஒரு ஒட்டு துணி கூட இல்லாததால் உடல்கள் ஒட்டிக் கொண்டன. எழ முயற்சித்த போது சதைகள் பிரியத் தொடங்கி ரத்தம் வரத் தொடங்கின.

பெவிகுவிக்
உல்லாச நிலையில் பெவிகுவிக் ஊற்றியதால் அவர்களுடைய மர்ம உறுப்புகளும் ஒட்டிக் கொண்டன. இதையடுத்து இருவரையும் கற்களாலும் கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர். பின்னர் அவரது உடல்களை பிரித்து எரிக்க முயன்றுள்ளார். அப்போது பெண்ணின் பிறப்புறுப்பில் காயமும் ஆணின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டும் இருந்தது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்காக ரூ 15 க்கு ஒரு பெவிகுவிக் டியூப் வீதம் 50 டியூப்களை வாங்கி ஒரே பாட்டிலில் கலந்த பாலேஷ் குமார் கள்ளக்காதல் ஜோடி மீது ஊற்றியது தெரியவந்தது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications