சாராயக் கடைக்கு சாணி வீச்சு.. பாஜக ஆளும் மபியில் பாஜக தலைவர் உமா பாரதி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் உமா பாரதி மதுபானக் கடையில் சாணி வீசிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறார்.

 Uma Bharti threws cow dung to liquour shop demanding ban on alcohol in Madhya pradesh

இருப்பினும் ஆளும் பாஜக அரசு உமா பாரதியின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆர்ச்சா பகுதியில் ராம நவமி பண்டிகையின்போது ஒரு மதுபானக் கடை திறந்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடை முன்பாக தனது ஆதரவாளர்களுடன் சென்ற உமா பாரதி, மாட்டு சானத்தையும் கற்களையும் வீசினார்.

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் உமா பாரதி, தனது செயலுக்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார். "நேற்று அனுமனுக்கு பிடித்தமான முழு நிலவு நாள். எனவே நான் சரியான செயலை சரியான நாளில் சரியான இடத்தில் செய்திருக்கிறேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மது பானங்கள் விற்கப்படும் மதுக்கடையில் சாணியை வீசிவிட்டு சென்றேன். மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து மாநில அரசிடமும், தேசிய பாஜக தலைமையிடமும் பேசி வருகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+