Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து "டெக்கில்" அடித்த உம்ரான்.. மிரண்டு பார்த்த நியூசி.. பிசிசிஐ தெரியுதா? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்: போலீஸ்காரனை துரத்தி தலையில் சோடா பாட்டிலால் அடித்த ராஜா கிருஷ்ணப்ப பைர்யா.. "அவனுக்கு என் பேரு தெரியாது" என்றுவிட்டு.. மீண்டும் போலீசிடம் ஓடி.. ராக்கி பாய்.. என் பேரு நியாபகம் வச்சுக்கோ என்று சொல்லிவிட்டு செல்வான். கேஜிஎப் படத்தில் வரும் இந்த காட்சியை இன்று ஈடன் பார்க் மைதானத்தில் நிகழ்த்தி காட்டி இருக்கிறார் இளம் புயல் உம்ரான் மாலிக்.

ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்துவிட்டு.. இதுதான் என் பேரு.. நியாபகம் வச்சுக்கோ என்று பந்தை டெக்கில் அடித்து அடித்து பிசிசிஐக்கு பாடம் எடுத்து இருக்கிறார் உம்ரான் மாலிக்.. அவருக்கு மறக்க முடியாத முதல் ஒருநாள் போட்டியாக இந்த போட்டி அமைய போகிறது.

நியூசி வீரர்களை தனது புல்லட் வேக பந்துகளில் உம்ரான் மாலிக் மிரட்டி இருக்கிறார். பந்தையே காணோம் என்று நியூசி வீரர்கள் திணறி.. பந்தை பிடிக்க எப்போதும் திணறும் பண்ட் இன்று கொஞ்சம் கூடுதலாக உம்ரான் ஓவர்களில் திணறினார்.

இன்று மேட்சில் என்ன நடந்தது? உம்ரான் எப்படி பந்துகளை வீசினார்?

பேட்டிங்

பேட்டிங்


நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று ஈடன் பார்க் மைதானத்தில் நாடககிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் பொறுமையாக ஆடி கடைசி 10 ஓவர்களில் மட்டும்தான் ரன் அடித்தது. அவசரப்பட்டு அடித்து விக்கெட்டுகளை இழக்காமல் 40 இவர்கள் பொறுமையாக அடித்து கடைசி ஓவர்களில் இந்திய அணி வேகமாக ஆடி 306 ரன்களை அடித்தது. இந்திய அணியில் ஓப்பனிங் இறங்கிய தவான் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். 76 பந்துகள் பிடித்த அவர் 80 ரன்கள் எடுத்தார்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்களை அவர் எடுத்தார். 40 இவருக்கு பின் ஓவருக்கு 12 ரன்கள் எடுக்கும் அளவிற்கு இந்திய அணி வேகம் காட்டியது. கடைசியில் வந்த வாஷிங்க்டன் சுந்தர் இன்னும் வேகம் காட்டினார். 37 ரன்களை இவர் வெறும் 16 பந்துகளில் அடித்தார். இதனால் இந்திய அணி எளிதாக 306 ரன்களை எடுத்தது. இதன்பின் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. 25 பந்தில் 22 ரன்கள் எடுத்து இருந்த பின் ஆலனை ஷரத்துல் தாக்கூர் விக்கெட் எடுத்தார்.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

அதன்பின்தான் உம்ரான் மாலிக் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பவுலிங் செய்து வந்தார். முதல் ஓவரிலேயே கடைசி பந்தில் 151 கிமீ வேகத்தில் பந்து வீசினார். அதன்பின் மற்ற ஓவர்களில் ஓவருக்கு ஒரு 150 கிமீ வேக பந்தை வீசினார். உம்ரான் தனது 3வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளை 151 கிமீ வேகத்தில் வீசினார். அதேபோல் இன்னொரு பந்தை 153 கிமீ வேகத்தில் வீசினார். இன்று வீசப்பட்ட பந்துகளில் இரண்டு இன்னிங்க்ஸும் சேர்த்து இதுவரை இதுதான் வேகமான பந்து ஆகும். ஆனால் வெறுமனே வேகமாக மட்டும் வீசவில்லை. நிறைய பந்துகளை துல்லியமாக டெக்கில் வீசி நியூசி பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.

திணற வைத்த உம்ரான் மாலிக்

திணற வைத்த உம்ரான் மாலிக்

அதோடு ஷார்ட் பந்துகள், ஆப் சைட் பந்துகள், ஸ்லோ பந்து என்றும் வீசி அசத்தினார். இன்று இவர் வீசிய ஸ்லோ பந்து 116 கிமீ வேகத்தில் சென்றது. அதேபோல் சில யார்க்கர்களையும் வீசினார். தனது பவுலிங்கில் நிறைய வெரைட்டிகளை காட்டினார். 15.1 ஓவரில் டெவன் கான்வாய் 24 ரன்கள் இருந்த போது அவரின் விக்கெட்டை எடுத்தார். அதேபோல் 19.5 ஓவரில் டெரி மிட்சல் 11 ரன்கள் இருந்த போது அவரின் விக்கெட்டை எடுத்தார். இவர் வேகமாக வீசினால் விக்கெட் விழுந்த இரண்டு பந்துகளுமே 145கிமீக்கும் குறைவாக வந்த ஸ்லோ பந்துகள். இவர் வெரைட்டியாக போடுவது நியூசிலாந்து வீரர்களுக்கு சவாலாக அமைந்தது.

 யார் இவர்?

யார் இவர்?

ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பையில் இவரை எடுக்காமல் இருந்த பிசிசிஐ அமைப்பிற்கு இவர் தக்க பதிலடி கொடுத்து உள்ளார். தன்னுடைய திறமை என்னவென்று நிரூபித்து உள்ளார். வீட்டில் நல்ல காரை வைத்துக்கொண்டு பிசிசிஐ ஓட்டமால் இருக்கிறது என்று உம்ரான் புறக்கணிக்கப்பட்டதை பிரிட் லியே விமர்சனம் செய்து இருந்தார். தற்போது அது எவ்வளவு சரியானது என்று உம்ரான் நிரூபித்து உள்ளார். கடந்த ஐபிஎல் சீஸனின் பெஸ்ட் என்றால் அது உம்ரான் மாலிக்தான். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியில் ஆடிய உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசினார்.

இளம் வீரர்

இளம் வீரர்

22 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார். இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். கடந்த சீசனுக்கு முன்பாகவே உம்ரான் மாலிக் பவுலிங்கை பார்த்து இர்பான் பதான்தான் பரிந்துரையை செய்தார். இவரை எடுங்கள் என்று ஹைதராபாத் அணிக்கு ஆலோசனை சொன்னார். இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். இப்போது ஹைதராபாத் அணியின் மிக முக்கியமான வீரராக உம்ரான் மாலிக் உருவெடுத்துள்ளார். ஒரே ஓவரில் அனைத்து பந்துகளையும் 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசுவதுதான் இவரின் திறமை. ஆனால் அது மட்டுமின்றி நல்ல ஷார்ட் பந்து, யார்க்கர் பந்து, நல்ல லென்த்தில் பந்து போடுவது என்று இவருக்கு திறமைகள் பல உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+