ரூபாய் நோட்டு அவலம்.. தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வுக் கட்டணம் செலுத்த வங்கியில் பணம் எடுக்க முடியாமல் உத்தரப் பிரதேச மாநில கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவலம் நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18-வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் தேர்வுக்கட்டணம் செலுத்த வங்கியில் பணம் எடுக்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவலம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மாவை புசுருக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை தேர்வுக்கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Unable to withdraw money for exam fees, teen hangs self: Cops

இதனால், மாணவர் சுரேஷ் கடந்த சில தினங்களாக வங்கியில் பணம் எடுக்க முயற்சித்து வந்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எனவே, தேர்வுக் கட்டணம் செலுத்த பணம் எடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பிய சுரேஷ், வீட்டில் மின் விசிறியில் அவரது அம்மாவினுடைய சேலையினைக் கட்டித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாண்டா மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சுரேஷின் உறவினர்கள் கூறியதாவது: கல்லூரியில் தேர்வுக் கட்டணம் செலுத்த புதன்கிழமை (இன்று) கடைசி நாளாகும். எனவே தேர்வுக் கட்டணத்துக்கான பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத விரக்தியில் சுரேஷ் தலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் ஆத்திரம் அடைந்த அந்தக் கிராம மக்கள் வங்கி மீது கல்விசித் தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் போனதால் திங்கள்கிழமை அன்று உத்தரப் பிரதேச மாநில தின்ட்வாரி காவல் நிலைய எல்கைக்குட்டபட்ட ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+