For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தமா "குத்திய" முஸ்லிம்கள்.. குபீர் உற்சாகத்தில் பாஜக.. குஜராத்தை "தாமரை" கொய்தது எப்படி தெரியுமா

குஜராத் பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் உதவியது எப்படி தெரியுமா

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தல் முடிவில், பாஜகவின் மிகப் பெரிய வெற்றிக்கு மிக மிக முக்கியக் காரணமாக அசாதுதீன் ஓவைசியின் முஸ்லிமீன் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும்தான் என்றே சொல்லலாம்.

குஜராத்தில் இன்று பாஜக பெற்ற சாதனை வெற்றியில், அக்கட்சி ஒரு முஸ்லிமைக் கூட களமிறக்கவில்லை என்றாலும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் ஒரு பங்கு உள்ளது.

குஜராத்தை பொறுத்தவரை, சிறுபான்மையினர் வாக்குகள் குறித்து பாஜக கவலைப்பட்டது போல தெரியவில்லை. இந்த தேர்தலில், ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக்கூட களத்தில் நிற்கவைக்கவில்லை...

காங்கிரசை கைவிட்ட தலித்துகள், பழங்குடியினர்.. அடிப்படை ஓட்டு வங்கியிலேயே ஓட்டை.. கலங்கடிக்கும் குஜராத்காங்கிரசை கைவிட்ட தலித்துகள், பழங்குடியினர்.. அடிப்படை ஓட்டு வங்கியிலேயே ஓட்டை.. கலங்கடிக்கும் குஜராத்

 7 பேர் போட்டி

7 பேர் போட்டி

இதில் குறிப்பட்டு சொல்ல வேண்டியது, அகமதாபாத்தின் தரியாபூர் தொகுதியாகும்.. காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளர்களை இங்கு களம் இறக்கியது.. இங்கு மொத்தம் 7 பேர் போட்டியிட்டார்கள்.. அதில் 5 பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.. அதாவது, காங்கிரஸ் வேட்பாளர் தன்னுடைய மதத்தை சார்ந்தவர்களிடமிருந்தே போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், இந்த தொகுதியிலும் வாக்குகள் பிரியும் நிலைமையும் ஏற்பட்டது...

லாபக்கணக்கு

லாபக்கணக்கு

அதேபோல, காங்கிரஸின் மற்றொரு பாரம்பரிய விசுவாசமான முஸ்லீம் தொகுதிகளும் பிளவுபடலாம் என்று அனுமானிக்கப்பட்டது.. காரணம், ஒவைசி தலைமையிலான AIMIM தேர்தலில் களமிறங்கியது.. 13 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியிருந்தாலும், இதில் 2 பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் ஆவர்.. அதிக முஸ்லீம் வாக்குகள் உள்ள காங்கிரஸின் இம்ரான் கெடவாலா களமிறங்கிய உள்ள ஜமால்பூர்-காடியா, ஜிக்னேஷ் மேவானி போட்டியிடும் வட்காம் போன்ற இடங்களில் AIMIM முஸ்லீம் அல்லாதவர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் காங்கிரஸின் வாக்குகளை பிரிக்க நேர்ந்தால், அது பாஜகவுக்கு லாபமாக மாறும் என்றும் யூகிக்கப்பட்டது.

 ரிசல்ட் யாருக்கு?

ரிசல்ட் யாருக்கு?

அதேபோல, பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக வெளிப்படையாக பேசியதுடன், ஆட்சிக்கு வந்தால் அதைத் திரும்ப பெறுவதாக உறுதியளித்தாலும், முஸ்லிம் வாக்குகளை தக்கவைக்க காங்கிரஸ் தன்னால் இயன்றவரை முயற்சித்தது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. ஆனால் மேற்கண்ட இந்த கணிப்புகள் எல்லாம் இன்றைய ரிசல்ட்டில் நடந்தேறியதா? இஸ்லாமிய வாக்குகள் யாருக்கு சாதகமாக சென்றுள்ளன என்பதுதான் ட்விஸ்ட்டே.

ஓவைசி

ஓவைசி

குஜராத்தில் பாஜகவின் மிகப் பெரிய வெற்றிக்கு மிக மிக முக்கியக் காரணமாக அசாதுதீன் ஓவைசியின் முஸ்லிமீன் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும்தான் என்றே சொல்லலாம்... இந்த இரு கட்சிகளும் இணைந்து முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கியில் மிகப் பெரிய ஓட்டையை போட்டுள்ளனர்... கடைசியில், இது பாஜகவின் வெற்றியை ரொம்பவே சுலபமாக்கி விட்டது.

 முஸ்லிம்கள்

முஸ்லிம்கள்

உதாரணமாக தாரியாபூர் தொகுதியை எடுத்துக் கொண்டால், இது முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதி. காங்கிரஸ் எளிதாக வெல்லும் தொகுதியும்கூட.. இங்கு காங்கிரஸ் சார்பில் கியாசுதீன் ஷேக் போட்டியிட்டார்.. அவரை பாஜகவின் கெளசிக் ஜெயின் அசால்ட்டாக தோற்கடித்துள்ளார்... அதாவது முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதியில் முஸ்லீம் வேட்பாளரை இந்து வேட்பாளர் தோற்கடித்துள்ளார். காரணம், காங்கிரஸுக்கு போக வேண்டிய வாக்குகளில் பெரும் பகுதியை ஓவைசி கட்சியும், கெஜ்ரிவால் கட்சியும் பிரித்து விட்டதே.

 16 தொகுதி

16 தொகுதி

முஸ்லீம்கள் அதிகம் உள்ள 16 தொகுதிகளில்ஆம் ஆத்மி வெல்லவில்லை. ஆனால் இக்கட்சியும், ஓவைசி கட்சியும் இணைந்து காங்கிரஸ் வாக்கு வங்கியை சிதறடித்து விட்டன... ஓவைசி கட்சி 13 தொகுதிகளில் போட்டியிட்டது.. இதில் 2 பேர் மட்டுமே இந்து வேட்பாளர்கள்.. மற்றவர்கள் முஸ்லீம்கள். இக்கட்சியும் காங்கிரஸை காலி செய்துள்ளது. பாஜகவுக்கு வெற்றியை சுலபமாக்க உதவியுள்ளது.. ஜமல்பூர் காடியா தொகுதியில் காங்கிரஸின் இம்ரான் காடேவாலா தோற்றுள்ளார். .. வட்காம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் வலுவான எதிர்ப்பையே தெரிவித்தது.. நாடு முழுவதும் இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியது... ஆனால் இந்த கொடூர பாலியல் பலாத்காரம் நடந்த தொகுதியான கோத்ராவில் பாஜகதான் இப்போது வென்றுள்ளது... இதெல்லாம் மக்களின் மன நிலை குறித்து ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது.. 11 பேரின் விடுதலைக்காக பாடுபட்டவரான கோத்ரா தொகுதி பாஜக தலைவர் சந்திரசின் ரால்ஜி அங்கு வெற்றி பெற்றுள்ளார். இவர் 6வது முறையாக இங்கு வெல்கிறார் என்பது முக்கியமானது.

ஹேப்பி பாஜக

ஹேப்பி பாஜக

ஆக, முஸ்லிம்கள் அதிகம் உள்ள பல தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது... இந்த வெற்றியானது, வரப்போகும் எம்பி தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள்.. குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பல இடங்களில், காங்கிரஸை தோற்கடித்து ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது, மிகப்பெரிய சக்ஸஸ் ஆக பார்க்கப்படுகிறது.. அதேபோல, அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட 17 இடங்களில் 12 இடங்களில் பாஜக தன் முக்கியத்துவத்தை பதிய வைத்துள்ளது.. இதில் காங்கிரஸுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளதும், பாஜகவுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, இந்த தொகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸே வெற்றிபெற்று வந்தது என்பதும் வரலாற்று ரீதியான உண்மையாகும்.

English summary
Unexpected result: BJP Gains As AAP, Owaisi's Party Divide Muslim Voters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X