தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை
-தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை
-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்
-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்
-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்
-சிறுபாசன திட்டங்களுக்கு ரூ5,300 கோடி நிதி ஒதுக்கப்படும்
-ஒரு லட்சம் கி.மீ. நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும்
-குறுந்தொழில் முனைவோருக்கு ரூ20 ஆயிரம் கோடி முதலீட்டில் முந்த்ரா வங்கிகள் அமைக்கப்படும்

-பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும் நடைமுறை தொடரும்
-சரக்குகள்- சேவை வரி திட்டமான ஜிஎஸ்டி, 2016 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்
-இந்த ஆண்டு ஊரக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நிதி ஒதுக்கப்படும்
-மத்திய அரசின் வருவாயில் 62% மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்
-2015-16ல் 3.9%; 2016-17ல் 3.5%; 2017-18ல் 3% என நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்
-எல்.பி.ஜி. நேரடிமானியத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
-2015-16ல் விவசாயிகளுக்கு ரூ.8.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
-ஊரக மேம்பாடுக்கு ரூ25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
-சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் விரிவாக்கப்படும்
-3 ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை நாட்டின் மொத்த உற்பத்தியில் 3% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
-வரி வருவாயில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை- ஆனாலும் நிதிப் பற்றாக்குறை 4.1%க்குள் இருக்கும்
-காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்
-விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் வருவாய் வீழ்ந்து வருவதால் வரி வருவாயை சீர்படுத்துவது அவசியம்
-மாநிலங்களுக்கான் நிதி ஒதுக்கீடு ரூ 5.24 லட்சம் கோடியாக அதிகரிப்பு
-2020க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம்
-நாட்டின் 75வது சுதந்திர தினமான 2022க்குள் அனைவருக்கும் வீடு திட்டம் அமலாக்கப்படும்
-10% பொருளாதார வளர்ச்சியை விரைவில் எட்டுவோம்
-2020க்குள் கிராமங்களுக்கு மின்சாரம் முழுமையாக வழங்கப்படும்
-மேக் இந்தியா மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நாட்டை உற்பத்தி கேந்திரமாக மாற்ற வேண்டும்
-நாடு முழுவதும் 80,000 உயர் நிலை பள்ளிகள் மேம்படுத்தப்படும்
-ஜன்தன் திட்டம், ஆதார், மொபைல்- சரக்கு- சேவை வரிகள் ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்
-நகர்ப்புற- கிராமப்புற வேறுபாட்டை இனியும் ஏற்க முடியாது.. இரண்டையும் இணைத்த பொருளாதாரமே எங்கள் திட்டம்
-எங்கள் திட்டங்கள் அனைத்துமே ஏழைகளை மையமாகக் கொண்டவை
-விவசாயத்துறையில் வருவாய் சிக்கலில் உள்ளது. மத்திய நிதி முதலீடுகள் அவசியமாகிறது
-அரசின் முன் 5 பிரதான சவால்கள் முன்னுள்ளன
-80 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது
-2022க்குள் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் 4 கோடி வீடுகள் கட்டப்படும்
-பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து வறுமையை கட்டுப்படுத்துவோம்
-நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்
-2015-16ல் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 8-8.5% ஆக இருக்கும்
-நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம். பணவீக்கம் இந்த ஆண்டு இறுதியில் 5%க்குள் இருக்கும்
-மத்திய அரசின் 3 சாதனைகள் ஜன்தன் யோஜனா, நிலக்கரி சுரங்க ஏலம், தூய்மை திட்டம்
-பணவீக்க விகிதம் 6%க்கும் குறைவாக இருப்பதில் உறுதியான நடவடிக்கை
-6 கோடி கழிப்பறைகளை கட்டுவதற்கு இலக்கு- அருண் ஜேட்லி
-50 லட்சம் கழிப்பறைகள் ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டன
-அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேர மின்சாரம்
-ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உறுதி
-இந்த ஆண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.3% ஆக இருக்கும்
-மக்கள் வளர்ச்சிக்காகவும் மறைமுகம் இல்லாத அரசுக்காகவும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினர்
-நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தை மறைமுகம் இல்லாமல் நடத்திக் காட்டினோம்- ஜேட்லி
-மக்கள் ஊழல், முறைகேடுகளை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர்
-ரூபாய் மதிப்பு 6.4% அதிகரித்துள்ளது
-உலகின் மிக முக்கியமான பங்குச் சந்தைகளில் 2வது சிறந்த சந்தை இந்தியா- ஜேட்லி
-பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களும் சம பங்கு வகிக்கின்றன- அருண் ஜேட்லி
-பொருளாதார மேம்பாட்டுக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
-செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் நலனுக்காகவே: அருண் ஜேட்லி
-உலக நாடுகள் இந்தியா மீது ஏராளமான எதிர்பார்ப்பை வைத்துள்ளன- ஜேட்லி
-நாடாளுமன்றத்துக்கு வந்த பட்ஜெட் பேப்பர்கள் பண்டல்கள்
Union Budget 2015 copies arrive at the Parliament. Tack LIVE updates: http://t.co/wCpesMR7UD #BudgetwithNDTV pic.twitter.com/ftzvz84ms4
— NDTV (@ndtv) February 28, 2015 -நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடியது
-மத்திய பொதுபட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
-பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட்
-நாட்டின் 67வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி
- பட்ஜெட் பேப்பர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி வரும் ஜேட்லி
-பட்ஜெட்டில் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சலுகைகள் அறிவிக்கப்படும்
-தூய்மை இந்தியா திட்டம், நதிகள் தூய்மை திட்டத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம்
-நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
-பட்ஜெட் தாக்கலாவதை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளில் கிடுகிடு உயர்வு
-பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது
-மத்திய பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்
-நாடாளுமன்றம் வந்தார் அருண் ஜேட்லி
Delhi : Finance Minister Arun Jaitley at Finance Ministry, will present the Union Budget 2015-16 today #Budget2015 pic.twitter.com/m4B463X6go
— ANI (@ANI_news) February 28, 2015 -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications