‛‛ஜேகேஎன்ஃஎப்’’ அமைப்புக்கு 5 ஆண்டு தடை.. இரவில் மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு! யார் இவர்கள்?
ஜம்மு காஷ்மீர்: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோத செயல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பை இன்று மத்திய அரசு தடை செய்துள்ளது.

ஜேகேஎன்ஃஎப் எனும் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி (Jammu Kashmir National Front) எனும் அமைப்பு வரும் 5 ஆண்டுகள் வரை செயல்பட மத்திய அரசு அதிரடியாக இன்று தடை விதித்துள்ளது.
இந்த ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி எனும் அமைப்பு நயாம் அகமது கான் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பல புகார்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்றன. இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜேகேஎன்எப் எனும் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுதல், அங்கு பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சதித்திட்டம், பாதுகாப்பு அமைப்பினர் மீது கல்வீசுதல் உள்ளிட்டவற்றில் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதனால் 5 ஆண்டுகள் வரை ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்புக்கு தடை விதிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications