மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலே காலமானார்
டெல்லி: மத்திய தொழிலாளர் மற்றும் பணி நியமனத் துறை அமைச்சரான சிஸ் ராம் ஓலே உடல் நலக் குறைபாடு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர்ரும், மத்திய தொழிலாளர் மற்றும் பணி நியமனத் துறை அமைச்சருமான 86 வயது சிஸ் ராம் ஓலே இதயகோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நிலைப் பிரச்சினைகளால் நீண்ட காலமாக அவதியுற்று வந்தார்.
இந்நிலையில், குர்காவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவர் ராஜஸ்தான் மாநில நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். மேலும், கடந்த 1996-ல் இருந்து சிஸ் ராம் ஓலே, வெவ்வேறு காலக்கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், சிஸ் ராம் ஓலேயை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
மத்திய அமைச்சரின் மறைவை ஒட்டி, இன்று இரங்கல் கூட்டத்தோடு அவை ஒத்தி வைக்கப் படும் எனத் தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications