ஓஹோ கதை இப்படி போகுதா? லாலுவின் ஆர்ஜேடியுடன் ஜேடியூவை இணைக்கிறாரா நிதிஷ்குமார்? பற்ற வைக்கும் பாஜக!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது ஐக்கிய ஜனதா தளம் கட்சியை (ஜேடியூ) லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் விரைவில் இணைத்துவிடுவார் என மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். ஆனால் லாலுவின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
"இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை முன்னிறுத்த வேண்டும் என்கிறது ஜேடியூ. இதற்கு லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி ஆதரவளிக்கிறது. பீகாரை சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக "இந்தியா" கூட்டணி முன்னிறுத்த வேண்டும் என்பது இவர்களது அஜெண்டா.

ஆனால் நிதிஷ்- லாலு இரட்டையரின் இந்த அஜெண்டாவை உடைக்கும் வகையில் இந்தியா கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார்.
இதனால் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கொந்தளித்துப் போயினர். அத்துடன் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்து வெளியேறியும்விட்டனர். இதனால் நிதிஷ்குமார் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்பின்னணியில் வரும் 29-ந் தேதி ஜேடியூவின் தேசிய கவுன்சில் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணிக்கு நிபந்தனைகளை ஏதேனும் இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முன்வைக்கலாம் என கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், லோக்சபா தேர்தலை முன்வைத்து நிதிஷ்குமாரின் ஜேடியூவும் லாலுவின் ஆர்ஜேடியும் ஒரே கட்சியாக இணையப் போகிறது. இந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்தே கிடைத்திருக்கிறது. பீகார் அரசியலில் இது முக்கியமான மாற்றம் என கொளுத்திப் போட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.
ஆனால் இதனை லாலுவின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் சிலர் தாங்கள் வெளிப்படுத்த விரும்பும் கருத்தை மற்றவர்கள் மூலமாக வரவழைக்க ஆசைப்படுகின்றனர். இதெல்லாம் நடக்காது. "இந்தியா' கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை என விளக்கம் தந்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications