‛‛போட்டியின்றி தேர்வு’’.. மீண்டும் ராஜ்யசபா எம்பியானார் எல் முருகன்.. மத்திய பிரதேசத்தில் வெற்றி
போபால்: தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியின்றி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல் முருகன். இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறையின் இணை அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக செயல்பட்டு வருகிறார். இவரது ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
எல் முருகன் மட்டுமின்றி அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்த பாஜகவின் அஜய் பிரதாப் சிங், கைலாஷ் சோனி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜ்மணி பட்டேல் ஆகியோரின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலமும் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக 5 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எல் முருகன் தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ ராசாவை எதிர்த்து களமிறக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியாகின. இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படமாட்டார் என கூறப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் ட்விஸ்ட் வைத்தது.
அதாவது மத்திய பிரதேசத்தில் காலியாகும் 5 ராஜ்யசபா இடங்களுக்கு பாஜக 4 வேட்பாளர்களையும், காங்கிரஸ் ஒரு வேட்பாளரையும் அறிவித்தது. அதன்படி பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி எல் முருகன், உமேஷ்நாத் மகாராஜ், பன்சிலால் குர்ஜார், மாயா நாரோலியா, காங்கிரஸ் சார்பில் அசோக் சிங் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் மனுத்தாக்கலும் செய்தனர்.
ராஜ்யசபா எம்பிக்கள் என்பது கட்சி எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி இருந்தது. தற்போதைய எம்எல்ஏக்கள் அடிப்படையில் 4 பாஜக வேட்பாளர்களும், ஒரு காங்கிரஸ் வேட்பாளரும் தேர்தல் இன்றியே வெற்றி பெறும் நிலை உருவானது.
இந்நிலையில் தான் இன்று போட்டியின்றி ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வானவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய பிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் செய்த எல் முருகன் உள்பட பாஜகவின் 4 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் எல் முருகன் அடுத்த 6 ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாக தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications