அரசியல் நாகரிகமா.. புதிய கூட்டணியா? சீமானுக்கு அருகில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் கெளதமன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் காட்டிய நெருக்கம் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து பெரும்பாலான கட்சிகள் வெளியேறிவிட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் கௌதமன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கலந்துரையாடிய நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்த விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், விரைவில் மதிமுக ஆகிய கட்சிகள் தவெக பக்கம் சென்றுவிட்டன.

Seeman

இதனால் புதிய கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. பாமக மற்றும் நாதக ஆகிய கட்சிகளை சேர்த்தால், அது திமுகவுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். ஆனால் பாமக இதுநாள் வரை அதிமுக மற்றும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதேபோல் தவெகவுடனும் நட்புடன் இருக்கிறது. இதனால் பாமகவுடன் பேச்சுவார்த்தையை இப்போது தொடங்க முடியாத சூழல் உள்ளது.

இப்படியான சூழலில் தான் இயக்குநர் கெளதமன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு அருகிலேயே சீமானும் அமர்ந்திருந்தார். அரசியல் களத்திலும் திமுகவை மிகக் காரசாரமாக விமர்சித்து வரும் சீமானுடன், ஸ்டாலின் மிகவும் சுமூகமாகவும், சிரித்த முகத்துடனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தத் திடீர் நெருக்கம் அங்கிருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திமுகவுக்கு ஆதரவான வாக்குகள் சிதறாமல் இருக்கவும், பலமான புதிய கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கவும் அறிவாலயம் தரப்பு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக அரசியல்வாதி வாரிசுகளின் திருமண நிகழ்ச்சிகளில் தான் கூட்டணிக்கான தொடக்கப்புள்ளி வைக்கப்படும்.

அதற்கு தமிழ்நாட்டில் ஏராளமான வரலாறு இருக்கிறது. அம்சாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க திமுகவுடன் நாதக பேசி வருகிறது. அதேபோல் திமுகவுக்கும் பெரிய வாக்கு வங்கி வைத்துள்ள கூட்டணி அவசியமாக இருக்கிறது. நாதக தொண்டர்களும் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், திமுகவுடன் சீமான் இணையக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+