வெனிசுலாவில் State Of Emergency.. கை - கால் இழந்த மக்கள்.. தரைமட்டமான கட்டிடம்.. எங்கும் அழுகை ஓலம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் "தேசிய அவசரநிலை" (State of Emergency) அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல, ஒரு நாட்டின் முழு இயந்திரத்தையும் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக திருப்பிவிடும் முக்கியமான சட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தாக்குதல், முன்னாள் அதிபரை இழந்த அரசு நிர்வாகம், மொத்த எண்ணெய் வளமும் டிரம்ப் கைக்கு சென்ற சோகம், நிர்கதியாய் நிற்கும் வெனிசுலாவுக்கு பெரும் பாதிப்பாக 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டை தாக்கியது மட்டும் அல்லாமல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் - முழு விவரம்
வெனிசுலா தலைநகர் கராகாஸுக்கு மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், அதற்கு ஒரு நிமிடத்திற்குள் 7.5 ரிக்டர் அளவிலும் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட Aftershocks அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.34 மணியில் இருந்து தொடர்ந்து ஏற்பட்டு உள்ளது. வெனிசுலா நேரத்தின்படி ஜூன் 24ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு பதிவாகியுள்ளது.
இந்த அதிர்வுகளால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆனது மட்டும் அல்லாமல் உயிர் இழப்பு எண்ணிக்கை 10000 முதல் 1 லட்சம் வரை செல்லும் என கணிக்கப்பட்டு உள்ளது. Morón என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் கராகாஸ்-ல் கட்டிடம் இடிந்து விழும் அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பார்க்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிப்பாடுக்குள் சிக்கி பலர் கை, கால் இழந்து ரத்த வெள்ளத்தில் உள்ளனர், பல முக்கியமான கட்டிடங்களும், மக்கள் வாழும் அப்பார்ட்மென்ட்களும் பெரும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரயில் பாதைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

'அவசரநிலை' என்றால் என்ன?
ஒரு நாடு அல்லது மாநிலம் மிகப்பெரிய இயற்கை பேரிடர், போர், உள்நாட்டு கலவரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அரசு "அவசரநிலை" அறிவிக்கும். அப்படி தான் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் "தேசிய அவசரநிலை" (State of Emergency) அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசு வழக்கமான நிர்வாக நடைமுறைகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, அனைத்து வளங்களையும் அவசர மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகிறது. அதாவது, மருத்துவ வசதிகள், பாதுகாப்புப் படைகள், நிதி வளங்கள், மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்படும்.

மக்களுக்கு என்ன பாதிப்பு?
அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு, வெனிசுலாவில் பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் மேலும் இடியும் அபாயம் இருப்பதால், பல பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் முழு திறனில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து மருத்துவம், உணவு, மீட்பு உதவிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

போக்குவரத்து முழுமையாக முடங்கியது
நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான சைமன் போலிவர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ரயில் பாதைகளும் சேதமடைந்ததால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் போக்குவரத்து மட்டுமல்லாமல், வர்த்தகம் மற்றும் பொருட்கள் விநியோகமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பேரிடர் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் தற்காலிகமாக முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
உயிரிழப்பு குறித்த அச்சம்
அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு (USGS) வெளியிட்ட ஆரம்ப மதிப்பீட்டின்படி, இந்த நிலநடுக்கங்களால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மீட்புக் குழுக்கள் இடிந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நிலநடுக்கத்திற்கு பின்பு Atershocks அதாவது பிந்தைய அதிர்வுகள் தொடர்வதால் மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ளன.
நிலநடுக்கத்தின் முழு தாக்கம் மற்றும் பொருளாதார சேதத்தின் அளவு அடுத்த சில மணிநேரத்திலோ அல்லது நாட்களிலோ தெளிவாகும்.












Click it and Unblock the Notifications