முதல்வர் விஜய்யின் உண்மை முகம் இதுதான்.. நேரில் சந்தித்த பிறகு பாடல் ஆசிரியர் உருக்கமான பதிவு! கையில் கவனிச்சீங்களா?
சென்னை: முதல்வரும் நடிகருமான ஜோசப் விஜய் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இருந்து வருகிறார். சட்டசபையில் அவர் பேசிய அதிரடி பதில்கள், எதிர்க்கட்சியினருடன் ஏற்பட்ட மோதல், அதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வெடித்த ஆதரவு - விமர்சனங்கள் என முழுக்க முழுக்க விஜய் பெயர்தான் ட்ரெண்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில்தான், திரைப்பட பாடலாசிரியர் விவேக் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடலாசிரியர் விவேக் பதிவு
இந்த சந்திப்பின் சிறப்பே, விவேக் வெறும் மரியாதை சந்திப்பாக மட்டும் விஜய்யை பார்க்கவில்லை. அவர் எழுதிய "ஆளப்போறான் தமிழன்" பாடலின் வரிகள் இடம்பெற்ற ஒரு சிறப்பு புகைப்பட ஃப்ரேமை விஜய்க்கு நினைவுப்பரிசாக வழங்கியுள்ளார். இதுவே தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏனெனில், "ஆளப்போறான் தமிழன்" என்பது சாதாரண பாடல் அல்ல; விஜய் ரசிகர்களுக்கு அது பல ஆண்டுகளாக ஒரு உணர்வு, ஒரு அடையாளம், ஒரு அரசியல் முன்னோட்டம் போலவே இருந்து வந்த பாடல்.
அந்தப் பாடல் வெளியான காலத்திலேயே "இது வெறும் சினிமா பாடலா... இல்ல விஜய்யின் எதிர்கால அரசியல் பாதைக்கு முன் எழுதப்பட்ட வரிகளா?" என்ற கேள்விகள் எழுந்திருந்தன. அந்த பாடலின் பல வரிகள் இன்று கூட ரசிகர்களால் அரசியல் கோஷமாகவே பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட பாடலை எழுதிய விவேக், தற்போது அதே வரிகளை ஃப்ரேமாக்கி தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய்க்கு நேரில் வழங்கியிருப்பது ரசிகர்களை இன்னும் அதிகமாக கவர்ந்துள்ளது.
விஜய்யின் அரசியல் பாதை
இந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த விவேக், விஜய்யைப் பற்றிய உருக்கமான குறிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில், "மனம் திறந்து பாராட்டுவதிலும், அளவற்ற அன்பை வழங்குவதிலும் அவரே முதன்மையானவர்" என்று விஜய்யின் மனிதநேயத்தை பாராட்டியுள்ளார்.
அதோடு, திரையுலகில் விஜய் அடைந்துள்ள உயரமும் வெற்றியும் தற்செயலாக கிடைத்தவை அல்ல; பல ஆண்டுகால உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். விவேக்கின் இந்த வார்த்தைகள் வெறும் பாராட்டு பதிவு மட்டுமாக பார்க்கப்படவில்லை.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக சட்டசபையில் விஜய் பேசிய விதம், அதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் உருவான அரசியல் பரபரப்பு, எதிர்க்கட்சிகளுடன் ஏற்பட்ட வார்த்தைப் போர் ஆகிய சூழ்நிலைகளில் இந்த பதிவு வெளியாகியிருப்பதால், ரசிகர்கள் இதை இன்னும் வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
"சட்டசபையில் பேசிக் கலக்கிய உடனே, 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய விவேக் நேரில் சென்று சந்தித்திருப்பது சும்மா சம்பவமில்லை" என்று விஜய் ரசிகர்கள் இந்த சந்திப்பை கொண்டாடி வருகின்றனர். மேலும், "ஆளப்போறான் தமிழன்" பாடலுக்கே இப்போது புதிய உயிர் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் படத்தின் பாடலாக இருந்தது; பின்னர் விஜய் ரசிகர்களின் கோஷமாக மாறியது; இப்போது விஜய் முதலமைச்சராகியிருக்கும் நேரத்தில் அதே பாடல் வரிகள் ஃப்ரேமாக அவருடைய கைகளில் சென்றிருப்பது ஒரு சின்ன விஷயம் அல்ல என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திரையுலகில் விவேக் - விஜய் கூட்டணி ரசிகர்களிடம் எப்போதுமே நல்ல வரவேற்பைப் பெற்ற ஒன்று. விஜயின் திரைபடப் பயணத்தில் பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருந்தவர் விவேக். குறிப்பாக மக்கள் மனசை தொட்ட வரிகளோடு, விஜயின் மாஸ் இமேஜை தூக்கும் வரிகளை எழுதுவதிலும் அவர் தனி இடம் பிடித்தவர்.

பாடலாசிரியர் சந்திப்பு
அதனால்தான் இந்த சந்திப்பு வெறும் 'ஒரு பாடலாசிரியர் - ஒரு நடிகர்' சந்திப்பு போல இல்லாமல், விஜயின் திரைப்பயணத்தையும் அரசியல் பயணத்தையும் இணைக்கும் ஒரு தருணமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முதல்வர் விஜய்யைச் சுற்றிய அரசியல் வெப்பம் இன்னும் குறையாத சூழ்நிலை நிலவுகிறது. சட்டசபையில் அவர் ஆளுநர் உரைக்கு பதிலளித்த போது எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்த பதில்கள் இன்னும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.
"பார்ட்டி ஃபண்ட்", "குட்டிக்கதை", "நாம்" என அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஆதரவும் விமர்சனமும் சேர்த்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த சூடே இன்னும் அடங்காத நேரத்தில் விவேக்கின் இந்த சந்திப்பு மற்றும் பதிவு வெளியானதால், விஜய் ரசிகர்கள் இதை ஒரு வகை 'மரியாதை முத்திரை' போலவே பார்க்கிறார்கள்.
சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஒரு காலத்தில் 'ஆளப்போறான் தமிழன்'னு எழுதியவர்... இன்று தமிழ்நாட்டை ஆளும் விஜய்யை சந்தித்து அதே பாடலை ஃப்ரேமாக கொடுக்கிறார். இதைவிட சின்ன சின்ன சிக்னல்கள் வேணுமா?" என்றும் பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.













Click it and Unblock the Notifications