சோ மறைவு… அரசின் சார்பில் அஞ்சலி செலுத்த கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா சென்னை வருகை
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு அஞ்சலி செலுத்த கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா சென்னை வருகிறார்.
டெல்லி: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு மத்திய அரசின் சார்பில் அஞ்சலி செலுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா சென்னை வருகிறார்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அளவில், சோ ராமசாமி மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சோவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பாக சோ ராமசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் சென்னை வருகிறார். இதுகுறித்த தகவலை அமைச்சர் மகேஷ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications