மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி ராஜினாமா- விரைவில் அமைச்சரவை மாற்றம்!
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி: மத்திய திறன்மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவை சனிக்கிழமையன்று மாற்றியமைக்கப்படுகிறது. பிரதமர் மோடி ஞாயிறன்று பிரிக்ஸ் மாநாடு செல்வதால் சனிக்கிழமை அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது.
இதையடுத்து இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தமது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளித்துள்ளார். முன்னதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ராஜீவ் பிரதாப் ரூடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மகேந்திர நாத் பாண்டே
இதேபோல் மகேந்திர நாத் பாண்டேவும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக கட்சி பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பாஜக தலைவராக மகேந்திர நாத் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் பதவி விலகுகிறார்.

தளம் அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா
இவர்களுக்குப் பதிலாக ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீர் வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் உமாபாரதி, குறு, சிறு தொழில்துறை ஆகிய கேபினட் அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறியுள்ளனர்.

உமாபாரதி துறை மாற்றம்
ஆனால் உமாபாரதியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. அவருக்கு வேறு ஒரு துறை ஒதுக்கப்பட உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள். அதேபோல் மத்திய அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படக் கூடும் என கூறப்படுகிறது.

மேலும் 2 பேருக்கு வாய்ப்பு?
நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வசம் பாதுகாப்பு துறை இருக்கிறது. அந்த துறை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட உள்ளது. அதேபோல் மறைந்த அனில் தவேயின் துறை, துணை ஜனாதிபதியாகி உள்ள வெங்கையா நாயுடுவின் துறைகளுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

நிர்மலா சீதாராமன் ராஜினாமா?
மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில இணை அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்தால் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

தமிழக பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன்?
நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்தால் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கின்றன பாஜக வட்டாரங்கள். சில இணை அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications