Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தானில் பாஜகவுக்கு கடும் போட்டி கொடுக்கும் காங்கிரஸ்! பாதிக்கு பாதியை அள்ளும் இந்தியா கூட்டணி

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். அதேபோல காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்து வருகிறது.

தேர்தல்: கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

Rajasthan Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP Congress Om Birla

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.

பாஜக: இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.

காங்கிரஸ்: காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

ராஜஸ்தான்: இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 12,13 தொகுதிகள் என 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை ராஜஸ்தானை காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், அங்கு எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக தற்போது பாஜக ஆட்சி பிடித்துள்ளது. எனவே லோக்சபா தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

கோட்டா: பாஜக சார்பில் 3 பேர் முக்கிய வேட்பாளராக இருக்கின்றனர். போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நிறைந்திருக்கும் கோட்டா லோக்சபா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள்.

ஓம் பிர்லா: ஆனால் 1971க்கு பிறகு யாரும் இந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றது கிடையாது. ஓம் பிர்லாவை பொறுத்த வரை, கடந்த 2014 முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றால், 1971க்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தலைவர் என்கிற பெருமையை பெறுவார்.

கஜேந்திர சிங் ஷெகாவத்: இம்மாநிலத்தில் களமிறக்கப்பட்டுள்ள பாஜகவின் அடுத்த இரண்டாவது பெரிய தலைக்கட்டு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவார். இவர் மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போட்டியிடும் ஜோத்பூர் தொகுதியிலும் காங்கிரஸ் vs பாஜக வேட்பாளர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். கோட்டாவை போலவே இதிலும் யாரும் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றது கிடையாது.

ஷெகாவத் கடந்த 2014 முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்த முறை வெற்றி பெற்றால், தொடர்ந்து 3வது முறை வெற்றி பெற்ற தலைவர் என்கிற பெருமையை பெறுவார்.

பூபேந்திர யாதவ்: ராஜ்தானில், பாஜக களமிறக்கியிருக்கும் மூன்றாவது தலைக்கட்டு, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆவார். இவர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்று தொழிலாளர், வேலை வாய்ப்பு, வனம் மற்றும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் போட்டியிடும் ஆல்வார் தொகுதியில் காங்கிரஸ் கடந்த காலங்களில் அதிக முறை ஜெயித்திருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக 24+1 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான்: இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 12,13 தொகுதிகள் என 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த முறை ராஜஸ்தானை காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தது. ஆனால், அங்கு எழுந்த உட்கட்சி பூசல் காரணமாக தற்போது பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. எனவே லோக்சபா தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

கோட்டா: பாஜக சார்பில் 3 பேர் முக்கிய வேட்பாளர்கள் இருக்கின்றனர். போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நிறைந்திருக்கும் கோட்டா லோக்சபா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள்.

ஓம் பிர்லா: ஆனால் 1971க்கு பிறகு யாரும் இந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றது கிடையாது. ஓம் பிர்லாவை பொறுத்த வரை, கடந்த 2014 முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றால், 1971க்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்ற தலைவர் என்கிற பெருமையை பெறுவார்.

கஜேந்திர சிங் ஷெகாவத்: இம்மாநிலத்தில் களமிறக்கப்பட்டுள்ள பாஜகவின் அடுத்த இரண்டாவது பெரிய தலைக்கட்டு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவார். இவர் மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போட்டியிடும் ஜோத்பூர் தொகுதியிலும் காங்கிரஸ் vs பாஜக வேட்பாளர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். கோட்டாவை போலவே இதிலும் யாரும் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்றது கிடையாது.

ஷெகாவத் கடந்த 2014 முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்த முறை வெற்றி பெற்றால், தொடர்ந்து 3வது முறை வெற்றி பெற்ற தலைவர் என்கிற பெருமையை பெறுவார்.

பூபேந்திர யாதவ்: ராஜ்தானில், பாஜக களமிறக்கியிருக்கும் மூன்றாவது தலைக்கட்டு, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆவார். இவர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்று தொழிலாளர், வேலை வாய்ப்பு, வனம் மற்றும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் போட்டியிடும் ஆல்வார் தொகுதியில் காங்கிரஸ் கடந்த காலங்களில் அதிக முறை ஜெயித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+