ராஜீவ்காந்தி கொலை சதி பற்றிய விசாரணை குழுவுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை பின்னணியிலுள்ள சதிகள் குறித்து விரிவாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் ஆயுட்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது மத்திய அரசு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி அம்சங்களை ஆராய சி.பி.ஐ.யின் பல்நோக்கு கண்காணிப்பு குழு (MDMA) அமைக்கப்பட்டது. இதில், உளவுத்துறை, ரா, வருவாய் உளவுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அக்குழுவின் ஆயுட்காலம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், பணிக்காலம் முடிந்த 2 மாதங்கள் கழித்து, திடீரென தற்போது மத்திய அரசு, அக்குழுவுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு அளித்துள்ளது. ராஜீவ் கொலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரன் பத்மநாதனின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருவதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்தான் கொலைக்கான நிதியுதவி செய்தவர் என்றும் அக்குழு சந்தேகிக்கிறது.
பத்மநாபன் நான்காண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில், கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications