அடுத்த ஐஸ்வர்யாராய் வந்துட்டாங்க... உலக அழகி பட்டம் வாங்கிய மனுஷி சில்லருக்கு இவ்வளவு திறமையா!
உலக அழகி பட்டம் வென்று இருக்கும் மனுஷி சில்லர் பல பன்முக திறமைகளை கொண்டவராக இருக்கிறார்.
Recommended Video

சண்டிகர் : ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றுளளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.
108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இதில் தனி ஆளாக கெத்து காட்டி இவர் பட்டம் வேண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் மிகவும் திறமையான நபர் என்ற உண்மைகள் தற்போது வெளியாகி இருக்கிறது. படிப்பு, அழகு, சினிமா, விளையாட்டு என பல துறைகளில் ராணியாக திகழ்கிறார்.

டாக்டராக போகும் மனுஷி சில்லர்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் பள்ளியில் இருந்தே மிகவும் திறமையான நபராக திகழ்ந்து வந்துள்ளார். மிகவும் நன்றாக படிக்கும் இவர் தற்போது மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இவர் குடும்பம் மொத்தமே மருத்துவ குடும்பம் தான். இவர் தந்தை 'டிஆர்டிஓ' நிறுவனத்தில் வேலை பார்க்கும் டாக்டர் பட்டம் பெற்ற நபர் ஆவார். இவர் தாயும் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி ஆவார்.

சிறந்த டான்ஸர்
படிப்பில் எப்படி சுட்டியோ அதேபோல் இவர் நடத்திலும் சுட்டிதான். சிறு வயதில் இருந்து இவர் குச்சுப்புடி நடனம் பயின்று வருகிறார். இந்தியாவில் இருக்கும் சிறந்த குச்சுப்புடி நடன கலைஞர்களிடம் சென்று இதற்காக பயிற்சி எடுத்து இருக்கிறார். குச்சிப்புடி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காக நிறைய பரிசுகள் வேறு வாங்கி இருக்கிறார்.

விளையாட்டிலும் கில்லி
அதேபோல் மனுஷி சில்லர் விளையாட்டு துறையிலும் ஆர்வம் உடையவர் ஆவார். இவர் பாலத்தில் இருந்து கயிறு கட்டி குதிக்கும் 'பங்கி ஜம்பிங்' விளையாட்டில் மிகவும் ஆர்வம் உடையவர். அதேபோல் பாராசூட்டில் பறக்கும் 'பாரா கிளைடிங்' விளையாட்டிலும் திறமைசாலி. கடலுக்கு உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று சாகசம் செய்யும் 'ஸ்னுர் கெலிங்' விளையாட்டிலும் திறமையானவர்.

நடிகை மனுஷி சில்லர்
மனுஷி சில்லர் சிறப்பாக நடிக்கவும் தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் காலமாக டெல்லியில் இருக்கும் சில நாடக கம்பெனிகளில் நடித்து வருகிறார். 8 வருடங்களுக்கும் மேலாக இவர் நடித்து வருகிறார். இவர் மிக முக்கியமான நடக்க நடிகர்கள் பலரிடம் நடிக்க கற்றுக்கொண்டுள்ளார். இதனால் இவர் எப்போது பாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கவிஞர் மனுஷி
மனுஷி சில்லர் கவிதைகளும் நன்றாக எழுதக் கூடியவர். கவிதை புத்தகங்கள் நிறைய எழுதி வெளியிடாமல் வைத்து இருக்கிறார். மேலும் இவர் சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர் என்றும் அவர் கல்லூரி நண்பர்கள் கூறியுள்ளனர். கல்லூரியில் நடக்கும் ஓவிய போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பார் என்றுள்ளனர்.

பாட்டு பாடும் மனுஷி சில்லர்
மனுஷி சில்லர் சிறுவயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்று வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் ஹிந்துஸ்தானி சங்கீதமும் கற்று இருக்கிறார். இவருக்கு நிறைய இசை கருவிகள் வாசிக்க தெரியும் எனவும் கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை பாடகராக முயற்சி எடுத்து வந்துள்ளார்.

சேவை நாயகி மனுஷி சில்லர்
மாதவிடாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மனுஷி 20 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து உள்ளார். இதற்காக 'புராஜக்ட் சக்தி' என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். பல பெண்களிடம் மாதவிடாய் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு இருக்கிறார். இந்தியா முழுக்க 5 ஆயிரம் பெண்களுக்கு இவர் இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications