சுனந்தா புஷ்கர் இயற்கைக்கு மாறான முறையில் மரணம்: மருத்துவர்கள் அறிக்கையில் குழப்பம்
டெல்லி:எதிர்பாராத இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணமடைந்துள்ளார் என அவரின் உடலை பிரேதப் பரிசோதனை நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று இரவு டெல்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, அவரது உடலில் மேற்புறத்தில் காயங்கள் இருந்ததாகக் கூறியுள்ளது. மேலும், இது அவரது மரணத்துக்குக் காரணமாகவும் இருந்திருக்கலாம், அல்லது இல்லாமலும் இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

உடல் நலம் சரியில்லாதவரா?
சுனந்தா இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் என்றும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டதாலும் இந்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என பல யூகங்கள் நிலவுகிறது.
மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்களின் அறிக்கையில் உறுதியான முடிவை எதுவும் அறிவிக்க மறுத்து விட்டனர். இந்த மரணம் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணம் இயற்கைக்கு எதிரானது:
மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் தரப்பில் கூறியிருப்பதாவது; சுனந்தாமரணம் எதிர்பாராத வகையில் திடீரென நடந்திருக்கிறது. இது இயற்கைக்குஎதிரானதாக உள்ளது. இவரது உடலில் சில காயங்கள் உள்ளன. இந்த காயங்கள்இறப்புக்கு காரணமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

விஷம் சாப்பிடவில்லை
விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் இல்லை. சில மாதிரிகள் பயோலாஜிக்கல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே 2 அல்லது 3 நாட்கள் பொறுத்திருந்து தான் முழு விவரத்தை தெரிவிக்க முடியும். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடல் ஒப்படைப்பு
உடல் பரிசோதனை முடிந்ததும் சுனந்தா உடல் அமைச்சர் சசிதரூரிடம்ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அந்த உடலுடன் டெல்லியில் அவரதுவீட்டுக்கு கொண்டு சென்றார். வேனில் இருந்த போது அமைச்சர் மிக கவலையுடன்கன்னத்தில் கை வைத்தபடி இருந்தார்.

போலீஸ் விசாரணை:
இந்த மரணம் குறித்து போலீசாருக்கு எவ்வித முழு தகவலும் கிடைக்கவில்லை.சுனந்தா மரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் அவர் வைத்திருந்த ஐபோன், ஐபேட் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். ஹோட்டல் அறையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினைக் கொண்டும் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications