ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் தம்பதி.. குழம்பி திணறும் பாஜக.. சரோஜினி நகர் யாருக்கு.. உ.பி பரபரப்பு

சரோஜினி நகருக்கு தம்பதி இருவருமே போட்டி போட்டு வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: ஒரே தொகுதிக்கு தம்பதி இருவருமே குறி வைத்துள்ளதால், உத்தரபிரதேச பாஜக குழப்பத்தில் உள்ளது.. இதனால் சரோஜினி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தின் தேர்தல், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது...

7 கட்டங்களாக இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது... பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.

பாஜக

பாஜக

இதற்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாய் இறங்கி உள்ளன.. சீட் பிரச்சனைகளும் வெடித்து வருகிறது.. வேட்பாளர் லிஸ்ட்டை அந்தந்த கட்சிகள் வெளியிட்டு வரும்நிலையில், சீட் கிடைக்காத பலர் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்.. இதனால், கட்சி விலகலும், கட்சி தாவலும் சர்வசாதாரணமாய் நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், பாஜகவுக்குள் உட்கட்சி பூசல் அதிகரித்து கொண்டே வருகிறது..

 2-ம் கட்ட லிஸ்ட்

2-ம் கட்ட லிஸ்ட்

கடந்த 15ம் தேதியன்று 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.. மேலும் 85 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை நேற்று வெளியிட்டது.. முதல்கட்டமாக லிஸ்ட் வெளியிட்டிருந்தபோது, மனோகர் பாரிக்கர் மகனுக்கு சீட் வழங்கப்படவிலை.. இதனால் உத்பால் பாரிக்கர் அதிருப்தியில் உள்ளார்.. அவரை ஆம் ஆத்மி வளைத்து போட முயன்று வருகிறது.

 ஸ்வாதி சிங்

ஸ்வாதி சிங்

இந்த நிலையில், இன்னொரு பிரச்சனை வெடித்துள்ளது நேற்று வெளியிட்ட லிஸ்ட்டில் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட இப்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் ஸ்வாதி சிங்கும் அவரது கணவர் தயாசங்கர் சிங் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர்... இருவருமே பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2017ல் பாஜகவில் இணைந்தவர்கள் ஆவர்.. ஸ்வாதி சிங் அமைச்சராக இருக்கிறார்.. ஆனால், இதே தொகுதியை தம்பதி இருவருமே கேட்டிருக்கிறார்கள்.. இந்த விவகாரத்தினால் தம்பதி இருவருமே பிரிந்து வாழும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

 சரோஜினி தொகுதி

சரோஜினி தொகுதி

ஆனால், சரோஜினி நகர் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை.. ஆனால் ஸ்வாதி சிங், முன்கூட்டியே அந்த தொகுதி தனக்குதான் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில், அங்கே பிரச்சாரத்திற்கான பேனர்களை இப்போதே தயாராக வைத்துவிட்டார்.. இதை பார்த்தும் கணவர் தன் முடிவை மாற்றி கொள்ளவில்லை.. சரோஜினி தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று ஒற்றைக்காலில் உள்ளார்..

 பாஜக குழப்பம்

பாஜக குழப்பம்

"கடந்த முறை நான் என் மனைவியை போட்டியிட செய்தேன்.. அதனால் இந்த முறை நான்தான் போட்டியிடுவேன்" என்று கறாராக சொல்கிறார், இந்த தம்பதி பிரச்சனையால் பாஜக குழம்பி போயுள்ளது.. யாருக்கு இந்த தொகுதியை தருவது என்று திணறி கொண்டிருக்கிறது.. எனினும், கணக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற அம்மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+