தாஜ் மஹாலின் பெயரை 'ராம் மஹால்' என மாற்றிடலாம்.. உ.பி பாஜக எம்எல்ஏவின் தொடர் குசும்பு!
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹாலின் பெயரை மாற்றியமமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லக்னோ: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹாலின் பெயரை மாற்றியமமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது தொடர் கதையாகியுள்ளது. திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா, காஷ்மீர் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர்.
அந்த வரிசையில் லீடிங்கில் உள்ளார் உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ. அண்மையில்
அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என்றும், லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை செருப்பால் அடியுங்கள் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பெயர்களை மாற்ற வேண்டும்
இந்நிலையில் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும்.

தாஜ்மஹாலை இடிக்கக்கூடாது
அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அதேபோல் தாஜ் மஹாலை எந்த காரணத்தைக் கொண்டும் இடிக்கக் கூடாது, ஏன் என்றால், அது நமது இந்திய மண்ணில் உருவானது.

ராம் மஹால்
தாஜ்மஹாலின் பெயரைத்தான் மாற்றி வைக்க வேண்டும். அந்த வகையில், தாஜ் மஹாலின் பெயரை ‘ராம் மஹால்' அல்லது ‘சிவாஜி மஹால்' அல்லது ‘கிருஷ்ண மஹால்' என மாற்றலாம்.

பெரும் சர்ச்சை
ஒரு வேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், தாஜ் மஹாலுக்கு ராஷ்டிர-பக்த் மஹால் என்று பெயர் சூட்டுவேன். பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications