உ.பி. போலீஸாரை என்கவுண்டர் செய்த பலே கேடி விகாஸ் துபே.. உஜ்ஜைனியில் அதிரடி கைது!
உஜ்ஜைன்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்று தனது கூட்டாளிகளுடன் தலைமறைவாக இருந்த பிரபல தாதா விகாஸ் துபே உஜ்ஜைனில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கடந்த ஒரு வாரமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தவர் அதிரடியாக இன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். மேலும், இன்று காலை இருவேறு சம்பவங்களில் விகாஸ் துபேவின் இரண்டு கூட்டாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். விகாஸ் துபேவின் முக்கிய கூட்டாளியான பஹூவா துபேவின் தலைக்கு ரூ. 50,000த்தை உத்தரப்பிரதேசம் போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் ஒரு கூட்டாளியான பிரபாத் மிஸ்ராவை கான்பூரில் இருந்து ஃபரிதாபாத் கொண்டு வரும் வழியில் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் மிஸ்ரா பலத்த காயம் அடைந்துள்ளார்.
போலீசாரின் பிடியில் இருந்த துப்பாக்கியை மிஸ்ரா பிடிங்கியுள்ளார். சுதாரித்துக் கொண்ட போலீசார் துப்பாக்கியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டதால், மிஸ்ராவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது போலீசார் அவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.
#WATCH Madhya Pradesh: After arrest in Ujjain, Vikas Dubey confesses, "Main Vikas Dubey hoon, Kanpur wala." #KanpurEncounter pic.twitter.com/bIPaqy2r9d
— ANI (@ANI) July 9, 2020
வியாழக்கிழமை விகாஸ் துபே ஃபரிதாபாத்தில் இருந்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலில் தங்குவதற்கு அவர் முயற்சித்து இருப்பதும், ஓட்டலுக்குள் சென்று வருவதும் அங்கிருக்கும் சிசிடிவில் பதிவாகி இருந்தது. இவரை பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸ் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புடைய விகாஸ் மீது 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.












Click it and Unblock the Notifications