அரசு பள்ளி மாணவர்களுக்காக அசத்தல் திட்டம்! உ.பியில் யோகி ஆதித்யநாத் அரசு புது முயற்சி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக 'ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு உரிமை' எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் பிரசாரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள 'ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு உரிமை' எனும் திட்டத்தின் பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த திட்டம் சமத்துவம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது. இன்று நான் தொடங்கி வைக்கும் பிரசாரம் வரும் 25ம் தேதி வரை நடைபெறும்.
பாலின சமத்துவத்தை கற்பித்தல், ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குதல், கவனிப்பு மற்றும் ஆதரவு, குடும்பங்கள், வீடுகள், பள்ளிகள், விளையாட்டுகள், தொழில்கள், சுகாதாரம் மற்றும் குழந்தை பாதுகாப்பு வசதிகள், சமூகம் மற்றும் பொது வாழ்க்கை ஆகியவற்றில் முன்னணியில் மாணவர்கள் வருவதை ஊக்கப்படுத்த இந்த திட்டம் நிச்சயம் உதவும். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் அரசு பள்ளிகளை மேம்படுத்த ஏராளமான திட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான கல்வியை வழங்கவும் ரூ.100 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே அரசு பள்ளி மாணவர்களின் தரம் நிச்சயம் மேம்படும்" என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications