உ.பி.யில் புதிய சர்ச்சை- பீர் கடையை திறந்து வைத்த பெண் அமைச்சர்- விளக்கம் கேட்கும் முதல்வர் 'யோகி'
உ.பி.பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராகவுள்ள சுவாதி சிங், மதுபானக் கடையை திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மது பார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை ஏற்பட்டு அமளிதுமளி ஆகியுள்ளது அம்மாநில அரசியல். அமைச்சர் சுவாதி சிங் பீர் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் சுவாதி சிங். இவர் லக்னோ பீர் விற்பனை மையத்தில், புதிய பார் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார்.

மதுபான பார் வாசலில் இருந்த ரிப்பனை வெட்டி, திறந்து வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அமைச்சர் சுவாதி சிங்கை, முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அமைச்சர் சுவாதி சிங்கின் இந்த செயலை அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன. இதுகுறித்து பதிலளிக்க சுவாதி சிங் மறுப்பு தெரிவித்துவிட்டார். பாஜக ஆளும் உ.பியில் இப்படி ஒரு நிலையா என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications