Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெர்முடாவ விடுங்க.. இமய மலையில் 800 எலும்புக்கூடுகள் கிடந்த ஏரி தெரியுமா? 80 ஆண்டாக விலகாத மர்மம்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை உச்சியில் உள்ள ரூப்கண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மர்மம் இன்னும் விலகாமலேயே உள்ளது.

உத்தராகண்டின் குமான் பிரிவுக்கு உட்பட்ட இமயமலைப் பகுதியில் ரூப்கண்ட் என்ற ஏரி அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரி திரிசூலம் என்று அழைக்கப்படும் மூன்று மலைச் சிகரங்களுக்கு மத்தியில் அமைந்து இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டுபிடிப்பு

பிரிட்டிஷ் ஆட்சியில் கண்டுபிடிப்பு

கடந்த 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது வனத்துறை அதிகாரி ஒருவர் இந்த ஏரியில் எலும்பூக்கூடுகள் இருந்ததை கண்டுபிடித்தார். அப்போது அவை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த ஜப்பான் நாட்டின் ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகள் என பலரும் நம்பினர். மேலும் சிலர் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எலும்புகள் என்றும், சிலர் பனிப்புயலால் இவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறி வந்தனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

அந்த ஏரிக்கு அருகே மலைகளின் கடவுள் எனப்படும் நந்தி தேவி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆட்சி செய்து வந்த ராஜாவும் ராணியும் தனது பணியாளர்களுடன் நந்தி தேவியிடம் தரிசனம் பெறுவதற்காக கோயில் சுவற்றில் ஏறிக் குதித்ததாகவும், அப்போது நந்தி தேவியின் கோபப் பார்வையால் அவர்கள் மீது மின்னல் தாக்கி உயிரிழந்ததாவும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

800 எலும்புக்கூடுகள்

800 எலும்புக்கூடுகள்

உத்தராகண்ட் அரசாங்கமும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிப்பதற்காக, ரூப்கண்ட் ஏரியின் பெயரையே மர்ம ஏரி என்று மாற்றி இருக்கிறது. பல ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த இந்த ஏரி உருகத் தொடங்கியவுடன் அதில் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. சுமார் 600 முதல் 800 எலும்புக்கூடுகள் வரை அதில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

 கிரேக்கர்களின் எலும்புகள்

கிரேக்கர்களின் எலும்புகள்

சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வரும் இந்த மர்ம ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்பூக்கூடுகள் இந்தியர்களுடையது மட்டும் இல்லை என்றும், தென் கிழக்கு ஆசியா மற்றும் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்களுடையது எனவும் தெரியவந்திருக்கிறது. அத்துடன் ஒரு எலும்புக்கூடு சீனாவை சேர்ந்தவருடையது என்பதும் உறுதியாகியுள்ளது.

டி.என்.ஏ. சோதனை

டி.என்.ஏ. சோதனை

71 எலும்புக்கூடுகளை ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் டி.என்.ஏ, சோதனைகளுக்கு உட்படுத்தியதில் அனைத்தும் ஒரே காலத்தில் உயிரிழந்தவர்களுடையது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஆண் மற்றும் பெண்கள் இந்த ஏரியில் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் அண்டை நாட்டவர்களின் எழும்புக்கூடுகள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் கிரேக்கம் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்களுடைய எலும்புகள் 17 - 20 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.

துயரங்களில் இறந்தவர்கள்

துயரங்களில் இறந்தவர்கள்

ஆனால், அந்த சடலங்களில் வைரஸ், பேக்டீரியா போன்ற நுண்கிருமிகள் கண்டுபிடிக்கப்படாததால் பெருந்தொற்றால் அவர்கள் இறக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில எலும்புகளில் முறிவுகளும் ஏற்பட்டுள்ளன. அவை புயல் காற்றில் சிக்கி மலை உச்சியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், உறுதிபடுத்தப்படவில்லை. அதே நேரம், இந்த எலும்புக்கூடுகள் பல்வேறு துயரங்களில் சிக்கி உயிரிழந்தவர்களுடையது என்பதை மட்டும் இந்த ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+