முதல் விக்கெட்! ம.பி.யில் பாஜக பிரமுகர் திடீர் ராஜினாமா! முகத்தில் சிறுநீர் கழித்ததால் மனமுடைந்தார்
போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் திடீர் ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் சித்தி மாவட்டம் குப்ரி கிராமத்தில் தாஷ்மத் ராவத் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்தார்.
இது கடந்த 5ம் தேதி நடந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பிரவேஷ் சுக்லா மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

மேலும் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏவுக்கு நெருக்கமானவர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை, தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிமித்து கட்டியிருந்ததாக கூறி பிரவேஷ் சுக்லா வசித்து வந்த வீடும் புல்டோசரால் இடிக்கப்பட்டது.
அதோடு பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தவரை வீட்டுக்கு அழைத்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் காலை கழுவி மன்னிப்பு கோரினார். அதன்பிறகு அவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். இந்நிலையில் தான் சித்தி மாவட்ட பாஜக பொது செயலாளர் விவேக் கோல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் கட்சி தலைவருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் ‛‛பழங்குடியினத்தை சேர்ந்தவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சித்தி பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லாவின் நடவடிக்கையால் நான் புண்பட்டுவிட்டேன்.
குறிப்பாக பழங்குடி மக்களின் நிலஅபகரிப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்னை காயப்படுத்தின. இப்போது ஒருவர் பழங்குடியினத்தவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் என்னை அதிகமான பாதித்தன. இதனால் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜினாமா குறித்த விவேக் கோல் கூறுகையில், ‛‛நான் எனது ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் மத்திய பிரதேச பாஜக தலைவர் விடி சர்மாவுக்கு அனுப்பி உள்ளேன். மேலும் பாஜகவின் நிர்வாகிககள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவிலும் அனுப்பி உள்ளேன். எனது ராஜினாமா முடிவு என்பது இறுதியானது. எனது ராஜினாமா முடிவை திரும்ப பெற கட்சியினர் கூறினர். ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.
விவேக் கோல் முதலில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். சுராட் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து மாவட்ட பொது செயலாளராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications