2 மர்ம நபர்களை அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்ல யூ-டர்ன் அடித்து டெல்லி ஏர்போர்ட்டுக்கு வந்த விமானம்
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா கிளம்பிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய வேகத்தில் யூ-டர்ன் அடித்து திரும்பி வந்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்காவுக்கு கிளம்பியது. விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய உடன் அதை திருப்பிக் கொண்டு வருமாறு விமானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து விமானி விமானத்தை யூ-டர்ன் அடித்து கிளம்பிய இடத்திற்கே கொண்டு வந்தார். விமானத்தில் இரண்டு மர்ம நபர்களை ஏற்றி அனுப்பவே அதை திரும்பி வருமாறு கூறியுள்ளனர். பின்னர் விமானம் 2 மர்ம நபர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றது.
அந்த 2 மர்ம நபர்கள் யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லாததால் குடியேற்றத்துறை அவர்களை தங்களிடம் ஒப்படைத்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் யூ-டர்ன் அடித்து வந்து அப்படி யாரை ஏற்றிச் சென்றது என்பது பற்றி மக்கள் சமூகவலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications