ஜூன் 19ம் தேதி மாணவர் விசா தினமாகக் கொண்டாட அமெரிக்கத் தூதரகம் திட்டம்
டெல்லி: இம்மாதம் 19ம் தேதியை மாணவர் விசா தினமாகக் கொண்டாட அமெரிக்கத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் மேற்படிப்பு என்பது பெரும்பாலான இந்திய மாணவர்களின் கனவு என்றே கூறலாம். ஆனால், பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகள் பிற நாட்டு மாணவர்கள் கல்வி பெற வருவதை அமெரிக்கா கட்டுப் படுத்தி வைத்திருந்தது.
தற்போது மீண்டும் அந்த எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வரும் 19ம் தேதியை மாணவர் விசா தினமாகக் கொண்டாட டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பண்டிகை சூழல்...
வரும் 19ம் தேதியன்று விசா விண்ணப்பித்தலுக்காக வரும் மாணவர்கள் பண்டிகை மற்றும் கல்லூரி சூழலுடன் அங்கு வரவேற்கப்படுவார்கள்.
பிரத்யேக அனுமதி...
அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக எப், ஜே மற்றும் எம் விசாக்களைப் பெறுவதற்காக வரும் மாணவர்களுக்கென அன்று தூதரகத்தின் கதவுகள் பிரத்தியேகமாகத் திறந்திருக்கும்.
குறிப்புகள்...
அமெரிக்க இந்திய கல்வி அறக்கட்டளையின் யுஎஸ்ஏ கல்வி மையத்தின் பிரதிநிதிகளும், தூதரக அலுவலர்களும் கல்லூரி படிப்புகள் மற்றும் விடுதி வாழ்க்கை போன்றவற்றின் குறிப்புகளை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவர்.
அதிகம்...
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த உயர்வானது அதற்கு முந்தைய ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications