Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்கான்: காபூலில் இருந்து மேலும் 168 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தது விமானப் படை விமானம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியர்களை மீட்க நாள்தோறும் 2 விமானங்களை இயக்க அமெரிக்கா படைகள் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 168 இந்தியர்களுடன் இந்திய விமானப் படை விமானம், காபூலில் இருந்து இன்று காலை புறப்பட்டு தற்போது காசியாபாத் விமான படை தளத்துக்கு வந்து சேர்ந்தது.

Recommended Video

    Afghan-ல் சிக்கி தவிக்கும் Indians.. தற்போதைய நிலை என்ன ?

    ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமானது. தலைநகர் காபூலில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    உலக நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக மீட்டு வருகிறது. காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தவித்து வருகின்றனர். இதனையடுத்து இந்திய விமானப் படை விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தியர்கள் மீட்பு

    இந்தியர்கள் மீட்பு

    முதலில் விமானப் படைக்கு சொந்தமான சி-17 ரக விமானம் மூலம் 190 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய தூதரகத்தில் பணிபுரிந்தவர்கள். இதனையடுத்து கடந்த திங்கள்கிழமையன்று 40 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் செவ்வாய்க்கிழமை 150 பேரை பாதுகாப்பாக அழைத்து வந்தது விமானப் படை விமானம். இந்த நிலையில் சனிக்கிழமையன்று மேலும் 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்தியர்கள் கடத்தலா?

    இந்தியர்கள் கடத்தலா?

    காபூலில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இந்த விமானம் தஜிகிஸ்தான் நாட்டு தலைநகர் துஷான்பேவில் தரை இறங்கி எரிபொருள் நிரப்பியது. பின்னர் இந்தியாவுக்கு இந்த விமானம் புறப்பட்டது. இந்நிலையில் இந்தியர்கள் 150 பேரை தாலிபான்கள் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் காபூல் விமான நிலையம் நோக்கி வந்த 150 இந்தியர்கள் உள்ளிட்டவர்களை விசாரணைக்குப் பின்னர் தாலிபான்கள் விடுவித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 150 இந்தியர்களும் உரிய நேரத்தில் விமானத்தில் ஏற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    கதறும் ஆப்கானிஸ்தான் மக்கள்

    கதறும் ஆப்கானிஸ்தான் மக்கள்

    காபூல் விமான நிலையத்துக்கு வெளிநாட்டு விமானங்கள் வந்து இறங்கிய உடனே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் தங்களையும் அழைத்து செல்லுங்கள் என கண்ணீரும் கதறலுமாக வேண்டுகோள் விடுத்து வருவது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் விமானங்கள் வந்திறங்கும் பகுதி தற்போதும் அமெரிக்க ராணுவத்தினர் வசமே உள்ளது. மற்றொரு பகுதியில் தாலிபான்கள் நிலை கொண்டுள்ளனர்.

    மேலும் 2 விமானங்களுக்கு அனுமதி

    மேலும் 2 விமானங்களுக்கு அனுமதி

    இந்நிலையில் இந்தியா நாள்தோறும் 2 விமானங்களை இயக்க அமெரிக்கா படைகள் அனுமதி அளித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் பொறுத்தவரையில் 20 ஆண்டுகளாக தங்களுக்கு பல்வேறு பணிகளில் ஒத்துழைப்பு அளித்த ஆப்கான் நாட்டவரை மட்டுமே தங்களுடன் அழைத்து செல்கிறது. இதனால் ஆப்கான் நாட்டினர் குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறி விமான நிலையம் செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளும் தாலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதனால் காபூல் நிலைமை ஒவ்வொருநாளும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 168 இந்தியர்கள் மீட்பு

    மேலும் 168 இந்தியர்கள் மீட்பு

    இதனிடையே இந்திய விமானப் படையின் சி17 ரக விமானம் மேலும் 168 இந்தியர்களுடன் இன்று காலை காபூலில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் காசியாபாத் ஹின்டன் விமான படை தளத்தை வந்தடைய உள்ளது. இந்திய விமானப் படையினர் தொடர் மீட்பு பணிகளால் காபூலில் எஞ்சியிருக்கும் இந்தியர்கள் நம்பிக்கையோடு தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்

    மேலும் 168 இந்தியர்கள் மீட்பு

    மேலும் 168 இந்தியர்கள் மீட்பு

    இதனிடையே இந்திய விமானப் படையின் சி17 ரக விமானம் மேலும் 168 இந்தியர்களுடன் இன்று காலை காபூலில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் தற்போது காசியாபாத் ஹின்டன் விமான படை தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய விமானப் படையினர் தொடர் மீட்பு பணிகளால் காபூலில் எஞ்சியிருக்கும் இந்தியர்கள் நம்பிக்கையோடு தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+