மேரிலாண்ட்– கர்நாடகா நல்லுறவு ஒப்பந்தம்: டாக்டர் ராஜன் நடராஜன் – சித்தராமைய்யா சந்திப்பு
பெங்களூர்: அமெரிக்க மேரிலாண்ட் மாகாண திட்ட மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் (துணைச் செயலாளர்) டாக்டர் ராஜன் நடராஜன், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவை சந்தித்து, இரு மாநிலங்களுக்கிடையேயான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேரிலாண்ட் - கர்நாடகா சகோதர உறவு
மேரிலாண்ட் அரசுடன், கர்நாடகா மாநிலம் நேரடி அரசு முறை உறவை ஏற்படுத்துவதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையே கல்வி, மருத்துவம், கட்டமைப்பு, தொழில், வர்த்தக உறவுகள் உருவாகுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

சோலார், சோலார் தெர்மல், பயோ டெக்னாலாஜி உள்ளிட்ட உயர்தொழில் நுட்பம், போக்குவரத்து சீரமைப்புத் திட்டங்கள், கல்வித் திட்டங்கள், மருத்துவத்துறை, அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேரிலாண்டின் புதுமைத் தொழில் நுட்பங்களை , கர்நாடகாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விவாதித்தனர்.
அரசு-தனியார் கூட்டு முதலீடுகள் மூலம் கல்வி, எரிசக்தி, மருத்துவத்துறைகளில் உள்ள வாய்ப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
கூடவே, இந்த துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் டாக்டர் ராஜனிடம், முதல்வர் சித்தராமைய்யா கேட்டு அறிந்து கொண்டார். மேரிலாண்ட் அரசுடன் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியங்களையும் அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டார். மேற்கு கரையோர கடற்கரை மாவட்டங்களில் சுற்றுலாத் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதித்தனர்.
இயற்கை எழில்களுடன் பிரபலமான கார்வார் உள்ளிட்ட கடற்கரை நகரங்களில், சுற்றுலா சொகுசுக் கப்பல்கள், தீம்பார்க் உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்தும் விவாதித்தனர்.
மேரிலாண்டிற்கு அழைப்பு
மேரிலாண்ட் கவர்னர் மார்டின் ஒ'மைலி யின் இந்திய பயணத்தின் போது உடன்பாட்டை தொடர்ந்து, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றுவரும் திட்டங்கள் குறித்தும் முதல்வரிடம் டாக்டர் ராஜன் எடுத்துரைத்தார்.
அதன் மூலம் நடைபெற்று வரும் தொழில், வர்த்தக, தொழில் நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் நேரடி முதலீடுகள் குறித்தும் விவரித்தார்.
கவர்னரை சந்திக்க மேரிலாண்டிற்கு வருமாறும் முதல்வர் சித்தராமைய்யாவுக்கு , டாக்டர் ராஜன் நடராஜன் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், அடுத்த வருடம் மார்ச் மாதம், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தொழில் துறை பிரதி நிதிகளுடன் மேரிலாண்ட் வருவதாக உறுதியளித்துள்ளார்.
பெங்களூர் வளர்ச்சித் திட்டங்கள்
முன்னதாக, இந்தியாவின் டெக்னாலஜி தலை நகராக பெங்களூர் நகரத்தின் வளர்ச்சி குறித்தும், வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் சித்தராமைய்யா டாக்டர் ராஜனிடம் எடுத்துரைத்தார்.
தமிழகம் உள்பட, இந்தியா முழுவதிலிருந்தும் பட்டதாரி இளைஞர்கள் நம்பிக்கையுடன் வேலை தேடி வரும் வகையில், மிகப்பெரிய மென்பொருள் நகரமாக, இந்தியாவின் சிலிக்கான் வேலியாக பெங்களூர் வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய புதிய குடியேற்றங்கள் மூலம் பெங்களூர் இந்தியாவின் மாபெரும் மெட்ரோ நகரமாக உருவெடுத்துள்ளதாக டாக்டர் ராஜன் பாராட்டுகளை தெரிவித்தார். பெங்களூர் நகர வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேரிலாண்டின் பால்டிமோர் நகரத்தின் ரெட் லைட் காமிரா உள்ளிட்ட நவீன கட்டமைப்புகள் அனைத்தையும் பெங்களூரில் செய்யத் தயாராக இருப்பதாகவும் டாக்டர் ராஜன் உறுதியளித்தார்.
பெங்களூர் நகரத்தை உலகத்தின் முதன்மையான அறிவுசார் நகரமாக (Knowledge City) மாற்றுவதற்கு தனியார் - அரசுத் துறை எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்று இருவரும் விரிவாக விவாதித்தனர்.
உள்துறை அமைச்சருடன் விருந்து
டாக்டர் ராஜனை வரவேற்ற முதல்வர் சித்தராமைய்யா தனது முக்கிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்காவில் உயர் அரசியல் பதவி வகிக்கும் முதல் இந்தியரான டாக்டர். ராஜனின் சாதனை குறித்து பெருமைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசு முடக்கம் என்ற சோதனைக் காலத்திலும், குறிப்பிட்ட நாளில் சந்திப்பிற்காக தமது மாநிலத்திற்கு வருகை தந்தமைக்கு சித்தராமைய்யா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அலுவல்கள் தவிர்த்து, இருவரும் பரஸ்பரம் குடும்ப நலன்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். இரு பெரும் அரசு நிர்வாகிகளின் சந்திப்பு என்றாலும், மிகவும் நட்புரீதியாக இந்த சந்திப்பு இருந்தது என இருவரும் தெரிவித்தனர்.
டாக்டர் ராஜனின் முதல்வருடனான சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ், கே கோவிந்தராஜ் எம்எல்சி ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் கேஜே ஜார்ஜ் அவரது இல்லத்தில் டாக்டர் ராஜனுக்கு உள்துறை அமைச்சர், மதிய உணவு விருந்தளித்தார்
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications