35 துண்டாக வெட்டிடுவேன்.. முதலிரவில் என்னை நீ தொட்டால் அவ்ளோதான்.. மணப்பெண் பேசப் பேச உறைந்த மணமகன்
கான்பூர்: கள்ளக்காதல் கொலைகள் பெருகி கொண்டிருக்கின்றன. கணவன், குழந்தைகள் என தகாத உறவுகளுக்காக, உயிர்கள் பலிவாங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.. அதிலும் சமீபகாலமாகவே, திருமணமான புதுமணப் பெண்கள், தங்கள் கணவன்களை கொல்வது பெருகி வருகிறது.. இப்போதும் ஒரு புதுமணப்பெண் துணிச்சலான காரியத்தை செய்திருக்கிறார். இது வட மாநிலங்களில் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது?
உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண் தற்போது கணவர் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியை சேர்ந்தவர் கேப்டன் நிஷாத்..26 வயதான இவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தை சேர்ந்த சித்தாரா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 29 ம் தேதி பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்தது.
முதலிரவு - மணமகள்
மறுநாள் அதாவது ஏப்ரல் 3ம் தேதி அன்று மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ தம்பதி இருவருக்கும் மே 2ம் தேதி, வெகு பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்தப்பட்டது.
இதையடுத்து, மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலிரவு அறைக்குள் மணமகன் உள்ளே நுழைந்தபோது, தலையில் சேலையால் முக்காடு அணிந்து, ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார் சித்தாரா.. அவரது கையில் கூர்மையான கத்தி இருந்தது. இதைப்பார்த்து மணமகன் அதிர்ச்சி அடைந்தார்..
கிட்ட வராதே - தொடாதே
அப்போது சித்தாரா சொல்லும்போது, "என்னை தொடாதே.. கிட்ட வராதே.. எனக்கு அமன் என்ற காதலன் இருக்கிறான்.. நான் அமனுக்கு சொந்தமானவள்.. இந்த கல்யாணத்தை பிடிக்காமல் செய்து கொண்டேன். கட்டாயப்படுத்தி உன்னை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அமன் மட்டுமே என்னை தொட முடியும். நான் அவனுடன்தான் வாழ ஆசைப்படுகிறேன். இவ்வளவு சொல்லியும், அதையும் மீறி என்னை தொட்டால் உன்னை 35 துண்டுகளாக பீஸ் பீஸாக வெட்டிவிடுவேன்" என்று மிரட்டினார்..
ஆயிரம் கனவுகளுடன் வந்த மணமகன், இதைக்கேட்டதுமே ஆடிப்போய் நின்றுவிட்டார்.. இரவு ரூமை விட்டு வெளியே வர முடியாமல், அங்கேயே சோபாவிலேயே விடிய விடிய உட்கார்ந்திருந்தார். மறுநாளும் இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்ல மணமகனுக்கு தைரியம் வரவில்லை.. எனவே, 3 நாட்களும் சோபாவிலேயே படுத்து எழுந்து சென்றார்..
துணிச்சல் பேச்சு
இதற்கு பிறகுதான் மணமகன் குடும்பத்தாருக்கு விஷயம் தெரிந்துள்ளது.. இதுகுறித்து சித்தாராவிடம் கேட்டதற்கு, "ஆமாம், நான் அமன் என்பவரை காதலிக்கிறேன்; என் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இந்த திருமணத்தை செய்துகொண்டேன் என்று சிறிதும் சலனமில்லாமல் துணிச்சலாகவும், தீர்க்கமாகவும், உண்மையை சொன்னார்.
இதையடுத்து, 2 குடும்பத்து பெரியவர்களும் இதுகுறித்து பேசினார்கள்.. இறுதியில், தாலி கட்டிய கணவருடன்தான் சித்தாரா வாழ வேண்டும் என்று முடிவானது.. இதனால் சித்தாராவும், கணவருடனேயே வாழ்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால், மணமகனுக்கு சோபாவிலேயேதான் பொழுது கழிந்துள்ளது.
சிசிடிவி காட்சி
நாளடைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று மணமகன் உட்பட அனைவருமே எதிர்பார்த்திருந்தனர்.. ஆனால், மே 30ம் தேதி நள்ளிரவு, வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து சித்தாரா தப்பி சென்றுவிட்டார்.. இது அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகியுள்ளது. இதை மணமகன் குடும்பத்தினர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.
இது குடும்ப பிரச்சனை என்பதால், 2 தரப்பிலுமே பேசி தீர்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக கூறிவிட்டதால், இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
பீதியில் மணமகன்
ஆனால், மணமகன் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "அமன் என்பவன் எங்களது மகனை கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.. அந்த மிரட்டல் ஆடியோ மெசேஜை சித்தாரா தன்னுடைய செல்போனில் எங்களுக்கு காட்டினார்.. இதனால் ஒருவித பயத்துடன்தான் நாங்கள் வாழ்ந்தோம். சித்தாரா வீட்டை விட்டு ஓடிப்போனது ஒருவகையில் நல்லதுதான். அவளும் நன்றாக இருக்கிறார், என் மகனும் உயிருடன் இருக்கிறார்" என்கிறார்கள்.
ஆனால், மணமகனுக்குதான், முதலிரவு சம்பவ அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டு வரவே முடியவில்லையாம்..
உபி மணமகன் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "அமன் என்பவன் எங்களது மகனை கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.. அந்த மிரட்டல் ஆடியோ மெசேஜை சித்தாரா தன்னுடைய செல்போனில் எங்களுக்கு காட்டினார்.. இதனால் ஒருவித பயத்துடன்தான் நாங்கள் வாழ்ந்தோம். சித்தாரா வீட்டை விட்டு ஓடிப்போனது ஒருவகையில் நல்லதுதான். அவளும் நன்றாக இருக்கிறார், என் மகனும் உயிருடன் இருக்கிறார்" என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications