1000 ஆபாச வீடியோ.. இந்த ஜோடிக்கு இதே வேலை.. வீட்டிலேயே ஸ்டுடியோ, ரிகர்சல்.. ஆடிப்போன உத்தரபிரதேசம்
கான்பூர்: கொரோனா காலத்தில், ஒட்டுமொத்த சினிமா உலகமே வருமானமின்றி தவித்தது. அப்போது, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, வளர்ந்து வரும் நடிகைகள், வேலையில்லாமல் அவதிப்படும் நடிகைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரித்திருந்தார். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாயும் சம்பாதித்து வந்தார்.. அதுபோலவே இப்போதும் ஒரு கொடுமை நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது... இதையடுத்து, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும், நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரது வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தினார்கள்.

ஸ்பெஷல் வெப்சைட்கள்
அப்போதுதான், உஜ்வாலும், அவரது மனைவி நீலுவும் சேர்ந்து, ஆபாச வெப்சைட்களை நடத்தி வந்தது அம்பலமானது.. சைப்ரஸ் நாட்டை சேர்ந்த டெக்னிஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்த இணைய தளங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்காக சட்டவிரோதமாக 15.66 கோடி வெளிநாட்டு நிதியையும் பயனபடுத்தியிருக்கிறார்கள் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
அதாவது, கிஷோர் தம்பதியினர், வெளிநாட்டினரிடம் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு, கடந்த 5 வருடங்களாகவே இப்படி ஆபாசப்படம் எடுப்பதை முழுநேர தொழிலாக வைத்திருக்கிறார்களாம்...
மாடலிங் துறை பெண்கள்
இதற்காக மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை, ஃபேஸ்புக்கில் குறிவைத்துள்ளனர்.. இதற்கான தேர்வையும் ஃபேஸ்புக்கிலேயே நடத்தியிருக்கிறார்கள்.. இதற்கெனவே "echato dot com" என்ற வெப்சைட்டை உருவாக்கி, மாடலிங் வாய்ப்பு தருவதாக விளம்பரம் தந்துள்ளார்கள் தம்பதி.
ஏற்கனவே மாடலிங் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள், இந்த விளம்பரத்தை பார்த்ததுமே தம்பதியினரை தொடர்பு கொண்டுள்ளனர்.. அப்படி தொடர்பு கொள்ளும்போது, நைஸாக பேச்சு தந்து, ஆபாச படங்களில் நடிக்குமாறு தம்பதி இருவரும் பிரெயின்வாஷ் செய்துள்ளனர்.. ஆன்லைன் ஆபாச வீடியோவில் நடித்தால் மாதம் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் விலைபேசியிருக்கிறார்கள்.
வீட்டிலேயே ரிகர்சல்
இதற்கு சம்மதித்த பெண்களை, ரிகர்சல் என்ற பெயரில், தங்களது வீட்டிலேயே ஒத்திகையும் நடத்தியிருக்கிறார்கள். ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பு செய்வதற்காகவே, தம்பதி வீட்டில் ஸ்டூடியோ செட்டப் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த ஸ்டுடியோவில் 24 மணி நேரமும் 3 பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம்.
அதேபோல, ஆபாச படங்களில் நடிக்கும் பெண்களில் பல பிரிவுகள் இருக்கிறதாம்.. அதாவது, பாதி முகத்தை மூடி நடிப்பது, முழு முகத்தை காட்டி நடிப்பது, முழு நிர்வாணமாக நடிப்பது என்று பிரிவுகளில் அந்த பெண்களுக்கு வேலை வழங்கப்படும்..
டோக்கன் வசதிகள்
இந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்ப்பதற்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் முன்கூட்டியே டோக்கன் வாங்க வேண்டுமாம். இறுதியில், ஆபாச வீடியோவில் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவீதத்தை தம்பதிகள் வைத்துக்கொண்டு, மிச்சமுள்ள 25 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட மாடல் பெண்களுக்கு தந்து விடுவார்கள்.
இதனால் கோடிக்கணக்கில் தம்பதிக்கு வருவாய் கொட்டியுள்ளது.. கஸ்டமர்களிடம் கிரிப்டோகரன்ஸி மூலம் பணத்தை வாங்கிகொண்டிருந்த தம்பதி, நெதர்லாந்தில் உள்ள ஒரு வங்கிக்கணக்கிற்கு ரூ.7 கோடியை டெக்னிஸ் நிறுவனம் டிரான்ஸ்பர் செய்துவிடுவார்கள்.. பிறகு, அந்த நிதியை இந்தியாவில் சர்வதேச டெபிட் கார்டு மூலம் எடுத்துக் கொள்வார்கள்.
ஆயிரக்கணக்கான பெண்கள்
இதற்கு முன்பு, ரஷ்யாவிலும் இதேபோன்று ஆபாச செயல்களில் இந்த தம்பதியினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.. இப்போது 5 வருடமாக வெளிநாட்டினரின் நிதி உதவியுடன், இந்தியாவில் ஆபாச படங்களை எடுத்து வந்துள்ளனர்.
இவைகளை எல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. எப்படியும் ஆயிரக்கணக்கான பெண்களை ஆபாச வீடியோவில் இவர்கள் நடிக்க தேர்வு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தம்பதியிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை தீவிரவாக நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications