5 ஆண்டுகளில்.. ஏற்றுமதி துறையில் உத்தர பிரதேசம் 250 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது.. யோகி ஆதித்யநாத்
ஆக்ரா: ஏற்றுமதி துறையில் 250 மடங்கு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் அடைந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
ஆக்ராவில் தொழில் முனைவோர் மாநாடு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 60 மவாட்டங்களை சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- இந்தியாவில் கார்பெட்கள் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் ரூ.17 ஆயிரம் கோடிக்கு நடைபெறுகிறது.

இதில் 10 ஆயிரம் கோடி ஏற்றுமதி பதோஹி, மிர்சாபூர், வாரணாசி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் நடைபெறுகிறது. பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறு தொழில்கள் தான் உள்ளன. வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, தற்சார்புடன் அதிக குடும்பங்கள் வாழ வழிவகுக்கிறது. சிறுதொழில் மூலம் மட்டுமே அதிக குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதார தற்சார்பையும் வழங்க முடியும்.
பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் மற்றும் ஊக்குவிப்புடன் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் இந்த துறையை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், பேக்கிங் உள்ளிட்டவற்றில் அரசு கொடுத்த முயற்சியினால் நல்ல பலன்கள் கிடைத்தன. உத்தர பிரதேசத்தில் சர்வதேச முதலீடுகள் ஆரம்பித்துள்ளன. 38 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை மாநிலம் பெற்றுள்ளது.
இதன் மூலம் 1 கோடியே 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசுடன் இணைந்து நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம், தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழலை வழங்க உள்ளது" என்றார்.
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. இதற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அமைப்பே எடுத்துக்காட்டாக உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையுடன் விளையாட யாரையும் அரசு அனுமதிக்காது. யாராவாது சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications