மத்திய அரசின் நெருக்கடி... உ.பி, கர்நாடகா, அஸ்ஸாம் ஆளுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா!!
டெல்லி: மத்திய அரசின் நெருக்கடியால் உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதலே தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட மாநில ஆளுநர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒரு சில மாதங்களில் பதவிக் காலம் முடியும் ஆளுநர்களை நீக்குவதில்லை என்று மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அத்துடன் ஆளுநர்களான கேரளாவின் ஷீலா தீட்சித், உத்தப்பிரதேசத்தின் ஜோஷி, பஞ்சாபின் சிவராஜ் பாட்டீல், மேற்கு வங்கத்தின் எம்.கே.நாராயணன், குஜராத்தின் கமலாபென், மத்திய பிரதேசத்தின் நரேஷ் யாதவ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஆளுநர் பி.எல். ஜோஷி இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டு அதை பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இதன் பின்னர் கர்நாடகா மாநில ஆளுநர் பரத்வாஜ், அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜே.பி. பட்நாயக், ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மத்திய அரசு கொடுத்த நெருக்கடிகளால் இந்த 3 ஆளுநர்களைப் போல மேலும் பல ஆளுநர்கள் ராஜினாமா செய்யக் கூடும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications