கொழுந்தியாளுடன் பேச்சு.. எக்குத்தப்பா எகிறிய குடும்ப உறவுகள்.. உத்தர பிரதேச மைத்துனருக்கு வந்த சோதனை
லக்னோ: கள்ளக்காதல் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதுவரை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்களும் பிரிவை சந்தித்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட தம்பதிகளின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது.. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் உள்ளது கமலுபீர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கேசவ் குமார்.. இவருக்கு 28 வயதாகிறது.. திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கொழுந்தியாள் - மைத்துனர்
இதே கிராமத்தில்தான், கேசவ் குமாரின் மாமியார் வீடும் உள்ளது.. எனவே, அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்றுவந்தபோது, கேசவ் குமாருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனா என்ற 19 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.. இது கள்ளக்காதலாக உருவானது.
ஒருகட்டத்தில் இவர்களின் தகாத உறவு, இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.. இதனால் இருவரையும் கண்டித்தனர்.. எனினும் அவர்களது அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்த இந்த கள்ளக்காதல் ஜோடி, கடந்த மாதம் 23ந்தேதி வீட்டைவிட்டு ஓடிவிட்டார்கள்..
அசிங்கப்படுத்திய மாமா
கேசவ் குமாரின் இந்த செயல், 22 வயதான மைத்துனர் ரவீந்திரனுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது... அக்காள் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், தன்னுடைய தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தையும் இப்படி அவமானப்படுத்தி விட்டாரே? என்று ஆவேசம் அடைந்தார்..
எனவே, அக்கா கணவரை பழிவாங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்றும் ரவீந்திரன் முடிவு செய்தார்..
ஆனால், இவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். எனினும் அக்கா கணவரை பழிவாங்குவதற்காக மறுநாளே, அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடினார்.
2 ஜோடிகள் - 2 குடும்பங்கள்
இதுகுறித்து 2 குடும்பத்தினரும் போலீசில் புகார்களை தந்தனர்.. இதையடுத்து இந்த புகார்களை பெற்றுக் கொண்ட போலீசார், 2 ஜோடிகளையும் வலைவீசி தேடி வந்தனர்.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 4 பேரையும் ஒருவழியாக போலீசார் கண்டுபிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. அதேபோல புகார்களை 2 குடும்பத்தினரையும் போலீசார் வரச்சொல்லி, பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இறுதியில், 2 ஜோடிகளையும், 2 குடும்பத்தினரும் மன்னித்துவிட்டனர்.. பிறகு 2 ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றார்கள்.. ஆனால், கேசவ் குமாரின் மனைவியும், அந்த 2 குழந்தைகளும்தான் இப்போது பரிதாபத்துடன் நிற்கிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications