உத்தரப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் மர்மம்.. பட்டுனு போட்ட பாம்பு.. அதென்ன சனிக்கிழமை ஸ்பெஷல்?
கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் பரபரப்பாக வைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்த சில சந்தேகங்களும், யூகங்களும் வலம்வந்தபடியே உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் விகாஸ் துபே... இவருக்கு 24 வயதாகிறது.. இவரை ஒருநாள் பாம்பு கடித்துவிட்டது.. இதையடுத்து உடனடியாக சிகிச்சை பெற்று உயிர் தப்பினார் விகாஸ்.

பாம்பு: ஆனால் மறுபடியும் பாம்பு கடித்தது.. மறுபடியும் உயிர் தப்பினார்.. இப்படியே தொடர்ந்து பாம்பு கடித்து கொண்டேயிருந்தது. அதுவும் ஒரே பாம்பு இவரையே சுற்றி சுற்றி வந்து கடித்துள்ளது.. ஒவ்வொருமுறையும் அதிர்ஷ்டவசமாக விகாஸ் உயிர் பிழைத்திருக்கிறார்..
இப்படி பாம்பு கடிக்கும்போதெல்லாம், பதேபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் விகாஸ்.. அங்கே மருத்துவர்களும் உடனடி சிகிச்சை தந்து இவரை உயிர் பிழைக்க வைப்பார்களாம். இப்படி இதுவரை 40 நாட்களுக்குள், 7 முறை பாம்பு கடிக்கு ஆளாகியிருக்கிறார் விகாஸ்.
செலவுகள்: ஆனாலும், ஓயாமல் தன்னை பாம்பு கடித்து, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்து கொள்வதால், பணம் நிறைய செலவாகிவிடுவதாக விகாசுக்கு கவலை ஏற்பட்டது. சில சமயம் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சை பெற வேண்டியிருக்குமாம்.. அப்போதெல்லாம் இன்னும் அதிகமான செலவு ஏற்பட்டுவிடுகிறது.. இப்படி தொடர்ச்சியான பாம்பு தாக்குதல் குறித்து, மாவட்ட கலெக்டரிடம் விகாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்..
அந்த மனுவில், தன்னை தீண்டும் பாம்பை பிடிக்கும்படி எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை... மாறாக, மருத்துவ சிகிச்சைக்காக தனக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்..
பாம்பு கடி: இதெல்லாம் ஒருபக்கமிருந்தாலும், அந்த பாம்பு ஏன் விகாஸை துரத்தி துரத்தி கடிக்கிறது என்று தெரியவில்லையாம்.. அதுவும் சரியான இடைவெளி விட்டு 7 முறை ஏன் தேடி வந்து பாம்பு கடிக்கிறது? ஒரே பாம்பு தொடர்ச்சியாக வட்டமிட்டு வர காரணம் என்ன? என்பதெல்லாம் குழப்பமாக இருக்கிறதாம்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் சனிக்கிழமைகளில் மட்டும்தான், அந்த பாம்பு விகாஸை கொத்துகிறதாம்.. இதையடுத்து, இதில் மந்திர தந்திரம் ஏதாவது உள்ளதா? பாம்பு பழிவாங்குதா? என்றெல்லாம் அந்த பகுதி மக்கள் குழம்பி போய் இருக்கிறார்களாம்..
தாக்குதல்கள்: இந்த தகவல் தீயாக பரவியதையடுத்து, தகவலறிந்த உயிரின ஆராய்ச்சியாளர்கள் விகாஸ் துபேவுக்கு நடந்துள்ள தொடர் பாம்பு தாக்குதல் குறித்து ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்..
இருந்தாலும் அவர்களாலும் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. பாம்பால் கடிக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்நிலையில், மருத்துவமனை தரப்பில் ஏதாவது இருக்கிறா? என்ற கோணத்தில் விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாம்.. இப்படியொரு விநோத சம்பவம், பெரும் வியப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
பாம்பு பழி: இது ஒருபுறமிருந்தாலும், பாம்பு பழி வாங்குவதாக பல்லாண்டு காலமாகவே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.. அறிவியலின் அடிப்படையில் இதை அணுகினால், பாம்புகள் யாரையும் பழிவாங்குவது கிடையாது.. வேண்டுமென்றே யாரையும் தீண்டுவது கிடையாது.. பாம்புகள் உண்மையிலேயே சாதுவானது.. மனிதர்களை பார்த்தாலே பயந்து ஓடிவிடும்.. ஆனால், தனக்கான பாதையை யாராவது மறைப்பது போலவோ, தன்னை தாக்குவது போலவோ தெரிந்தால்தான் மனிதனை தீண்ட நேரிடுகிறது.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.. பாம்புகளின் பிறப்பு உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் சுரப்பி, அவற்றை கொல்லும் போது பல முறை வெடிக்கிறது. அதனால் ஒரு அற்புதமான வாசனை வெளிப்படுகிறது... இந்த வாசனையானது மற்ற பாம்புகளை ஈர்க்கும் தன்மை கொண்டது.. அதனால்தான், ஒரு பாம்பு இறந்த பிறகு, பெண் பாம்புகள் அந்த இடத்தில் அடிக்கடி உலா வருகின்றன.
பெண் பாம்புகள்: இந்த சுரப்பியிலிருந்து வெளிப்படும் வாசனை பெண் பாம்புகளை அதிகமாக பாதிக்குமாம்.. ஆனால் அதை கொன்றவரை பழி வாங்குவதற்காக மற்ற பாம்பு வந்திருப்பதாக கிராமப்புற மக்கள் நம்பிவிடுகிறார்கள்..
அதுமட்டுமல்ல, பாம்புகளால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்கவும் முடியாது.. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது பாம்புகளுக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாகவே உள்ளது.. எனவே, எக்காலத்திலும் பாம்புகள் மனிதனை பழிவாங்காது.. பழி வாங்கும் உணர்வு, சில மனிதர்களுக்குதானே இருக்கிறதே தவிர, அப்பாவி பாம்புகளுக்கு கிடையாது...!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications