போட்டோ ஸ்டுடியோவுக்குள் நுழைந்த மனைவி.. அசையாமல் நின்ற கணவர்! உத்தரபிரதேச மார்க்கெட்டில் என்னங்க இது
லக்னோ: நாளுக்குநாள் கள்ளக்காதல்கள் பெருகி வரும்நிலையில், குடும்ப வன்முறைகளும் தலைதூக்கி வருவதை நீதிமன்றங்கள் கவலையுடன் தெரிவிக்கின்றன.. இளம் தம்பதிகளின் விவாகரத்துகளும் அதிகமாகி, அவர்களது குழந்தைகளின் எதிர்காலமும் சேர்ந்தே பாதிக்கப்பட்டுவிடுகிறது.. சிலசமயம், கள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளைகளை கொல்லும் கொடுமையும் இந்தியாவில் நடந்துவிடுகிறது. நேற்றைய தினம் உத்தரபிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நேற்றைய தினம் தெலுங்கானாவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டது.. அதாவது அங்குள்ள ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த 58 வயது குமாரசாமி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்..

இந்நிலையில், இவரது 2வது மனைவி கவிதாவுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமார் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிந்து கவிதாவை கணவர் கண்டித்துள்ளார்.
கள்ளக்காதல் கொலைகள்
இது கவிதாவுக்கு ஆத்திரத்தை தந்ததால், கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றுவிட்டார்.. கணவனின் காலை கவிதா பிடிக்க, கள்ளக்காதலன் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.. பிறகு பெற்ற மகளுக்கு தன்மீது சந்தேகம் திரும்பவும், மகளையும் கழுத்தை நெரித்து கொன்றார் கவிதா.
அமானுஷ்யம் சடங்குகள் செய்யப்பட்டு நடந்த கொலையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மகளின் சடலத்தை நடுரோட்டில் போட்டு, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொட்டி, சாலையில் ஆணிகளை அடித்து, மந்திரித்து வைத்துவிட்டு போனார்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மகளை கொன்ற கவிதாவும், கள்ளக்காதலனும் போலீசாரிடம் கைதானார்கள்.. தற்போது ஜெயிலில் உள்ளனர்.
உத்தரபிரதேச கொலை
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி தெலுங்கானாவில் அடங்காத நிலையில், உத்தரபிரதேசத்தில் மற்றொரு கொலை நடந்துள்ளது..
கோரக்பூரைச் சேர்ந்த தம்பதி விஸ்வகர்மா சவுஹான் - மம்தா... இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது... ஆனால், சில வருடங்களாகவே தம்பதி இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் முளைத்தன.. இதனால் அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கணவரை விட்டு பிரிந்த மம்தா, தன்னுடைய 13 வயது மகளுடன் ஷாபூர் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.. வாழ்வாதாரத்துக்காக, தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார்.
மார்க்கெட் போட்டோ ஸ்டுடியோ
இந்நிலையில், ஷாபூர் மார்க்கெட் பகுதியில் செயல்படும் பிரபலமான போட்டோ ஸ்டுடியோவுக்கு மம்தா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வந்திருக்கிறார்.. பிறகு அங்கிருந்து வெளியே வந்த அவரை, திடீரென விஸ்வகர்மா தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்கும் சண்டை முற்றியது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விஸ்வகர்மா, ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை நோக்கி சுட்டார்... இதில், கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே மம்தா சுருண்டு விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் மனைவி
8 மணி என்பதால், அந்த மார்க்கெட் பகுதியே பரபரப்பாக இருந்தது.. திடீரென துப்பாக்கி சூட்டில் பெண் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை பார்த்ததுமே, அங்கிருந்தவர்கள் மம்தாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மம்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர். துப்பாக்கி சூட்டினால் மார்க்கெட் பகுதியே பதற்றமாகிவிட்டது.. பொதுமக்கள் அங்கிருந்து விழுந்தடித்து கொண்டு ஓடினார்கள்..
ஆனால் மம்தாவை துப்பாக்கியால் சுட்ட விஸ்வகர்மா, அங்கிருந்து அசையவேயில்லை.. அதே இடத்தில் வெறிபிடித்ததுபோல நின்று கொண்டிருந்தார்..
அசையாமல் நின்ற கணவர்
அதற்குள் தகவலறிந்து போலீசார் மார்க்கெட்டுக்கு விரைந்து வந்தனர்.. அப்போதும் சம்பவ இடத்திலேயேதான் நின்றிருந்தார்... கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலாக விஸ்வகர்மா ஒரே இடத்தில் நின்றிருந்தார்..
மம்தாவால் எந்நேரமும் டார்ச்சருக்கு ஆளானேன் என்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லி கொண்டேயிருந்தார்.. பிறகு அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. உண்மையிலேயே தம்பதிக்குள் என்ன தகராறு நடந்தது? என்று தெரியவில்லை.. அளவுக்கு அதிகமான தொந்தரவை மம்தா தந்ததால், கொலை செய்துவிட்டதாக விஸ்வகர்மா புலம்பி கொண்டேயிருந்தார்..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications