உத்தரகாண்டில் ஆட்சியை இழக்கும் பாஜக.. தொங்கு சட்டசபைதான்: நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
டேராடூன்: உத்தரகாண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் நூலிழை வித்தியாசம் தான் இருக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது நியூஸ் எக்ஸ்.
நடந்துமுடிந்த உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடத்தைப் பிடிக்கும் என்றும், ஆனாலும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நியூஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 33-35 இடங்களைப் பிடிக்கும் என்றும், பாஜக 31-33 இடங்களும், ஆம் ஆத்மி 0-3 இடங்களும், இதர கட்சிகள் 0-2 இடங்களைப் பிடிக்கும் என்றும் நியூஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள். இந்த 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த 14ம் தேதி தேர்தல் நடந்தது.
உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக. திராத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோருக்கு பின்னர் 3 ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் தமி, ஆம் ஆத்மி சார்பில் கலோனல் அஜய் கோதியால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். பாஜக கடந்த தேர்தலில்ல் 57 இடங்களைப் பெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications